மைசூரு: பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரர் பிரஹலாத் மோடி மற்றும் அவரது குடும்பத்தினர் சென்ற கார், கர்நாடகாவின் மைசூரு அருகே விபத்துக்குள்ளானதில் அவர்கள் காயமடைந்தனர்.
பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரரான பிரஹலாத் மோடி, மகன், மருமகள், பேரக்குழந்தை ஆகியோருடன் மைசூரு அருகே காரில் சென்றுள்ளார். காரை வேறு ஒருவர் ஓட்டி உள்ளார். பந்திபூர் நோக்கி சென்று கொண்டிருந்த கார், இன்று (டிச. 27) நண்பகல் 1.30 மணி அளவில் சாலைத் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளாகியது. விபத்து நேரிட்டபோது காரில் பிரஹலாத் மோடி, அவரது மகன், மருமகள், பேரக்குழந்தை, வாகன ஓட்டுநர் ஆகியோர் இருந்துள்ளனர்.
இந்த விபத்தில் பிரஹலாத் மோடி, அவரது மகன், மருமகள், பேரக்குழந்தை ஆகியோர் காயமடைந்துள்ளனர். இதையடுத்து அவர்கள் அனைவரும் அருகில் உள்ள ஜெஎஸ்எஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அனைவருக்குமே லேசான காயம் ஏற்பட்டதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்தை அடுத்து மைசூரு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீமா லட்கர் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
17 mins ago
இந்தியா
34 mins ago
இந்தியா
2 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago