எஸ்-400 ஏவுகணைகள் ஜனவரியில் ஒப்படைப்பு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: ரஷ்யாவிலிருந்து அதிநவீன எஸ்-400 ஏவுகணைகளின் 3-வது தொகுப்பு 2023 ஜனவரி, பிப்ரவரியில் இந்தியா வந்தடையும்.

எஸ்-400 அதிநவீன ஏவுகணையாகும். இந்த ஏவுகணை 400கிமீ தொலைவில் உள்ள இலக்குகளைக் கூட துல்லியமாக தாக்கும். சீனா மற்றும் பாகிஸ்தானின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள இந்தியா ரஷ்யாவிடமிருந்து எஸ்-400 ஏவுகணைகளை வாங்க திட்டமிட்டு வந்தது. இந்நிலையில், 2018-ம் ஆண்டு இந்தியா ரஷ்யாவுடன் ரூ.35,000 கோடி மதிப்பில் 5 தொகுப்பு எஸ்-400 ஏவுகணைகளை வாங்க ஒப்பந்தம் மேற்கொண்டது. இதுவரையில் இரண்டு தொகுப்பு ஏவுகணைகள் அனுப்பப்பட்டுள்ளன.

அந்த இரண்டு தொகுப்புகளையும் இந்தியா லடாக் மற்றும் வடகிழக்கு பிராந்திய எல்லைகளில் நிறுத்தி உள்ளது. இந்நிலையில் மூன்றாம் தொகுப்பு 2023 ஜனவரி - பிப்ரவரியில் இந்தியாவுக்கு அனுப்பப்படும் என்று இந்திய பாதுகாப்புத் துறை தரப்பு தெரிவித்துள்ளது. மேலும், அடுத்த நிதி ஆண்டுக்குள் மீதமுள்ள இரண்டு தொகுப்புகளும் இந்தியாவை வந்தடையும் என்று கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்