இந்தியாவிற்கு எதிராக சீனாவும் பாகிஸ்தானும் இணையலாம்: ராகுல் காந்தி எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: சீனாவும் பாகிஸ்தானும் இணைந்து இந்தியாவுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கலாம் என காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார். ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுடனான உரையாடலில் அவர் இதனை தெரிவித்துள்ளார். இதுகுறித்த வீடியோ அவரது அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் வெளியாகி உள்ளது.

இந்திய ஒற்றுமை யாத்திரையை அவர் கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கினார். குமரி முதல் காஷ்மீர் வரையிலான இந்த நடைவழி பயணம் தற்போது டெல்லியை அடைந்துள்ளது. வரும் ஜனவரி மாதம் மீண்டும் பயணம் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

“எல்லையில் இந்தியாவின் நிலை சர்வதேச சூழலுடன் இணைக்கப்பட்டுள்ளது. எல்லையில் நிலை மாறிக் கொண்டே உள்ளது. நமக்கு இரண்டு எதிரிகள் உள்ளனர். அது பாகிஸ்தான் மற்றும் சீனா. அவர்கள் இருவரையும் தனித்தனியாக வைப்பதுதான் நமது கொள்கை.

முன்பு இரண்டு பக்கமும் போர் இருக்காது என சொல்லப்பட்டது. பின்னர் சீனா, பாகிஸ்தான், பயங்கரவாதம் என இரண்டரை பக்கமும் போர் நடைபெறலாம் என சொல்லப்பட்டது. ஆனால், இப்போது நமக்கு முன்னர் ஒரே ஒரு போர்தான். அது ராணுவம், பொருளாதாரம் என ஒன்றாக இணைந்து செயல்படும் சீனா, பாகிஸ்தான் உடனான போராக இருக்கலாம்” என அவர் தெரிவித்துள்ளார்.

வீடியோ லிங்க்..

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

9 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்