தாயிடம் இருந்துபெற்ற அன்பை பரப்புகிறேன் - புகைப்படம் வெளியிட்டு ராகுல் நெகிழ்ச்சி

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, நேற்று டெல்லியில் தனது தாயார் சோனியா காந்தியுடன் எடுத்துக் கொண்ட உணர்வுப்பூர்வமான புகைப்படம் ஒன்றை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

அதில், "அம்மாவிடம் இருந்து பெற்ற அன்பை நாட்டில் பரப்பி வருகிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.

ராகுல் காந்தி தலைமையில் நேற்று காலை டெல்லி வந்தடைந்த பாத யாத்திரையில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஜெய்ராம் ரமேஷ், பவன் கேரா, ரந்தீப் சிங் சுர்ஜிவாலா, புபிந்தர் சிங் ஹூடா, குமாரி செல்ஜா ஆகியோர் டெல்லியில் ராகுல் காந்தியுடன் நடந்து வந்தனர்.

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மற்றும் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியும் இதில் பங்கேற்றனர்.

முன்னதாக இந்த யாத்திரை ஃபரிதாபாத்தில் இருந்து டெல்லிக்குள் நுழைந்தபோது, ராகுல் காந்தியை டெல்லி காங்கிரஸ் தலைவர் அனில் சவுத்ரி மற்றும் பிற தலைவர்கள் வரவேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

3 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்