91 நாட்டில் பிஎஃப்-7 வைரஸ் - 2 ஆண்டுக்கு முன்பே பரவல்

By செய்திப்பிரிவு

புனே: சீனாவில் பிஎஃப்-7 ஒமிக்ரான் வகை கரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த பிஎஃப்-7 ஒமிக்ரான் வகை தொற்று, பிஏ 5 ஒமைக்ரான் வைரஸின் மரபணுவை சேர்ந்தது. இது ஒருவரிடம் இருந்து மற்றொரு வருக்கு வேகமாக பரவும் தன்மை கொண்டது.

இந்நிலையில், பிஎஃப்-7 வைரஸ் ஏற்கெனவே 2 ஆண்டுகளாக 91 நாடுகளில் பரவியுள்ளது என்று கிரிப்ஸ் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் தகவல் வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து வைரஸ் நிபுணர் ஒருவர் கூறியதாவது: தற்போது பிஎஃப்-7 வகை வைரஸ் குறித்து ஏன் அச்சம் ஏற்பட்டுள்ளது என்று தெரியவில்லை. கடந்த 2 ஆண்டுகளாகவே இந்த வைரஸ் 91 நாடுகளில் பரவி பலரை பாதித்துள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு ஆண்டு பிப்ரவரி 26-ம் தேதி அடையாளம் காணப்பட்டதில் இருந்து, உலகளவில் 47,881 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது.

கடந்த 22 மாதங்களில் பல நாடுகளில் இந்த வகை வைரஸ் காணப்பட்ட போதிலும், எக்ஸ்பிபி மற்றும் பிகியூ 1.1 போன்ற திரிபுகளை விட, பிஎஃப்-7 அதிக பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை. எனவே, பயமுறுத்தல் தேவையற்றது. இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து இந்திய சார்ஸ்-கோவிட்-2 ஜெனோமிக்ஸ் கூட் டமைப்பைச் சேர்ந்த தொற்றுநோய் நிபுணரும், டாக்டருமான பூஜாரி கூறும்போது, “சீனாவில் குறைந்த செயல்திறன் கொண்ட தடுப்பூசி செலுத்தியது, அதையும் மிகக் குறைவானவர்களே செலுத்தி கொண்டது, கரோனா கட்டுப்பாட்டை திடீரென விலக்கிக் கொண்டதால் பிஎஃப்-7 வைரஸ் வேகமாக பரவுகிறது’’ என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

23 hours ago

மேலும்