மோதிஹாரி: பிஹாரில் செங்கல் தொழிற்சாலை புகைப்போக்கி மீது மின்னல் தாக்கி இடிந்து விழுந்ததில் 9 பேர் உயிரிழந்தனர். மேலும் 15 பேர் காயமடைந்தனர்.
பிஹார் மாநிலம் கிழக்கு சம்பரன் மாவட்டம் மோதிஹாரி நகருக்கு அருகே ராம்கர்வா பகுதி உள்ளது. இங்குள்ள நரிர்கிர் பகுதியில் அமைந்துள்ள செங்கல் தொழிற்சாலையில் நேற்று 25-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
நேற்று மாலை திடீரென புகைப்போக்கி மீது மின்னல் தாக்கியதால் பெரும் வெடிச்சத்தம் கேட்டது. சத்தம் கேட்டதும் தொழிலாளர்கள் அங்கிருந்து அலறியடித்துக் கொண்டு ஓடினர். அப்போது புகைப்போக்கி கீழே விழுந்ததில் 9 பேர் சிக்கி உயிரிழந்தனர். 15 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அந்த இடிபாடுகளுக்குள் மேலும் சில தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டுள்ளனர். அவர்களை மீட்கும் பணியில் போலீஸாரும், தீயணைப்புப் படையினரும் ஈடுபட்டுள்ளனர்.
» சிக்கிமில் ராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து - 16 வீரர்கள் பரிதாப உயிரிழப்பு
» வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் விமான பயணிகளுக்கு கரோனா பரிசோதனை
இந்த விபத்தில் தொழிற்சாலையின் உரிமையாளரும் காயமடைந்துள்ளார். மீட்புப் பணிகளை மாவட்ட நிர்வாக அதிகாரிகள் மேற்பார்வையிட்டு வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
11 hours ago