ஆந்திராவில் 3 ஆண்டுகளில் கடன் அதிகரிப்பு - மத்திய இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி தகவல்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களின் கேள்விளுக்கு நேற்று மத்திய நிதி இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி பதில் அளிக்கையில் கூறியதாவது: ஆந்திர மாநிலத்தில் கடன் சதவீதம் ஆண்டுதோறும் கூடிக் கொண்டே போகிறது.

கடந்த 2018-ம் ஆண்டில் ஆந்திர மாநிலத்தில் ரூ.2,29,333.08 கோடி கடன் இருந்தது. இது தற்போது, ரூ.3,98,903.06 கோடியாக அதிகரித்துள்ளது. வெறும் கடன் சுமை மட்டுமின்றி, ஆந்திராவிற்கு ஆண்டுதோறும் கடன் சதவீதமும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. 2017-18 வருவாய் ஆண்டில், 9.8 சதவீதம் கடன் குறைந்தது. அதுவே 2020-21-ம் ஆண்டில், 17.01 ஆக கடன் சதவீதம் அதிகரித்துள்ளது.

கடந்த 2014-ல் புதிய ஆந்திர மாநிலத்தில், தெலுங்கு தேசம் ஆட்சிக்கு வந்த நாளில், தேசிய அளவிலான ஆந்திராவின் பொருளாதார கடன் சதவீதம் 42.2 சதவீதத்தில் இருந்து 23.3 சதவீதமாக படிப்படியாக 2015-ல் குறைந்தது. 2021-ம் ஆண்டு 36.5 சதவீதமாக பொருளாதார கடன் உள்ளது. இவ்வாறு இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

51 mins ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

மேலும்