நாடு முழுவதும் 11.5 கோடி விவசாயிகளுக்கு ரூ.2.24 லட்சம் கோடி நேரடியாக விநியோகம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: பிரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் மூலம் இதுவரை 11.5 கோடி விவசாயிகளுக்கு ரூ.2.24 லட்சம் கோடி விநியோகம் செய்யப்பட்டுள்ளது என்று மாநிலங்களவையில் மத்திய வேளாண் துறை இணை அமைச்சர் கைலாஷ் சவுத்ரி தெரிவித்தார்.

மாநிலங்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது உறுப்பினர் ஒருவரின் துணைக் கேள்விக்கு மத்திய அமைச்சர் கைலாஷ் சவுத்ரி எழுத்து மூலம் அளித்த பதில்: 2013-ம் ஆண்டில் விவசாயத்துக்கு பட்ஜெட் ஒதுக்கீடு ரூ.23ஆயிரம் கோடியாக இருந்தது.பிரதமர் மோடி தலைமையிலானஅரசு 2014-ல் அமைந்த பின்னர்வேளாண் துறைக்கு பட்ஜெட்டில்அதிக நிதி ஒதுக்கப்பட்டது. கடந்தநிதியாண்டில் ரூ.1.32 லட்சம் கோடிஅளவுக்கு விவசாயத்துக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதுவரை 11.5 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு பிரதமரின் கிசான் சம்மான் நிதித்திட்டம் மூலம் ரூ.2.24 லட்சம் கோடியை நேரடியாக வழங்கியுள்ளோம். விவசாயிகள் தங்களது விளைபொருட்களுக்கு ஏற்றத் தொகையை பெறுவதை நாங்கள் உறுதி செய்துள்ளோம்.

மேலும் குறைந்த செலவில் விளைச்சலைப் பெருக்குவதற்கான தொழில்நுட்பத்தை விவசாயிகள் பெறுவதற்கும் நாங்கள் வழிவகை செய்துள்ளோம்.

பிஎம்-கிசான் திட்டத்தின் மூலம்ஆண்டுதோறும் விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படுகிறது. இதன்மூலம் அந்த விவசாயிகள் தங்களுக்குத் தேவையான விவசாய செலவுகளை கவனித்துக் கொள்ள முடியும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE