இந்தூர்: பிரதமர் நரேந்திர மோடி குறித்து சர்ச்சைக்குரிய விதத்தில் பேசிய மத்தியப் பிரதேச மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் ராஜா பட்டேரியா கைது செய்யப்பட்டார்.
முன்னதாக அவருடைய வீடியோ ஒன்று இணையத்தில் வெளியானது. அதில் ராஜா பட்டேரியா, அரசியல் சாசனத்தை காப்பாற்ற பிரதமரை கொலை செய்ய வேண்டும் என்று பேசியிருப்பது பதிவாகியிருந்தது. ஆனால் அவரே கொலை செய்ய வேண்டுமென்றால் பிரதமரை தோற்கடிக்கச் செய்ய வேண்டும் என்று விளக்கிக் கூறியிருந்தார். இருப்பினும் இந்த வீடியோ தொடர்பாக பாஜகவினர் அளித்த புகாரின் பேரில் நேற்று பட்டேரியா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் இந்த வீடியோ குறித்து காங்கிரஸ் மாநில துணைத் தலைவர் அளித்த பேட்டியில், மோடி தேர்தல் நடைமுறைகளை அழித்துவிடுவார். அவர் மதத்தாலும், சாதியாலும், மொழியாலும் எல்லோரையும் பிரிப்பார். தலித்துகள், பழங்குடிகள், சிறுபான்மையினர் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. நீங்கள் அரசியல் சாசனத்தை காப்பாற்ற நினைத்தால் மோடியைக் கொல்லுங்கள். அதாவது அவரை தோற்கடியுங்கள்" என்று தான் பட்டேரியா பேசியிருந்தார் என விளக்கினார்.
ஆனாலும் பன்னா காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் மத்தியப் பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சவுகான், "இந்திய ஒற்றுமை யாத்திரை நடத்துவோரின் உண்மை முகம் வெளிவந்துவிட்டது" என்று கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
32 mins ago
இந்தியா
55 mins ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago