புதுடெல்லி: இளம்வயதினரை தவறாக வழிநடத்தும் டேட்டிங் ஆப்களை மத்திய அரசு தடை செய்ய வேண்டும் என்று காதலரால் கொலை செய்யப்பட்ட ஷ்ரத்தாவின் தந்தை விகாஸ் மதன் வாக்கர் வலியுறுத்தியுள்ளார்.
முதல்முறையாக செய்தியாளர் சந்திப்பு: ஷ்ரத்தா கொடூரமாக கொலை செய்யப்பட்டது குறித்த செய்தி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அவரது தந்தை விகாஸ் மதன் வாக்கர் முதன்முறையாக செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, "ஷ்ரத்தாவின் காதலை நான் ஏற்கவில்லை. ஆனால், அவர் தனக்கு 18 வயது ஆகிவிட்டது என்றும் தனது முடிவில் சட்டப்படி யாரும் தலையிட முடியாது என்றும் கூறினார். இதனால், மேற்கொண்டு பேச முடியாத நிலைக்கு நான் தள்ளப்பட்டேன். டேட்டிங் ஆப் மூலமாகத்தான் எனது மகளுக்கு அஃப்தாப் அறிமுகமாகி இருக்கிறார். அவரால் எனது மகள் தவறாக வழிநடத்தப்பட்டார். டேட்டிங் ஆப்கள் இளம் வயதினரை தூண்டுகின்றன. தவறான முடிவுகளை எடுக்க வழிகாட்டுகின்றன. இது ஒரு சமூக பிரச்சினை. இதுபோன்ற டேட்டிங் ஆப்களை அரசு தடை செய்ய வேண்டும்.
அஃப்தாபை தூக்கிலிட வேண்டும்: எனது மகளின் மரணம் குறித்த வழக்கு விசாரணை, காவல் துறையால் சரியாகவே நடத்தப்படுகிறது. ஆனால், எனது மகள் உயிருடன் இருந்தபோது காவல் துறை சரியாக செயல்பட்டிருந்தால் அவர் உயிரோடு இருந்திருப்பார். எனது மகளை அஃப்தாப் அடித்து துன்புறுத்தி இருக்கிறார். ஆனால், எனக்கு தெரியாமல் போய்விட்டது. எனது மகளுக்கு நேர்ந்ததுபோலவே அஃப்தாபுக்கும் நேர வேண்டும். அவரை தூக்கிலிட வேண்டும். அதேபோல், அஃப்தாபின் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் உள்ளிட்டோரிடமும் போலீசார் விசாரணை நடத்த வேண்டும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஷ்ரத்தா கொலை பின்னணி: மகாராஷ்ட்டிராவைச் சேர்ந்த 26 வயது இளம்பெண்ணான ஷ்ரத்தா வாக்கர், அஃப்தாப் அமின் பூனவாலா என்ற இளைஞரை காதலித்து வந்துள்ளார். இதற்கு ஷ்ரத்தாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதற்கு, தனக்கு 18 வயது ஆகிவிட்டது என்றும் எனவே, தனது முடிவில் யாரும் தலையிட முடியாது என்றும் அவர் கூறி இருக்கிறார். பெற்றோரின் எதிர்ப்பு காரணமாக காதலர்கள் இருவரும் டெல்லிக்குச் சென்று குடியேறி உள்ளனர். திருமணம் செய்து கொள்ளாமல் இருவரும் ஒன்றாக வசித்து வந்துள்ளனர்.
» இமாச்சலில் காங்கிரஸ் - பாஜக வாக்கு வித்தியாசம் 0.9%, குஜராத்தில் ஆம் ஆத்மிக்கு 12.92% வாக்குகள்!
இந்நிலையில், சில மாதங்களிலேயே இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டதை அடுத்து, கடந்த மே மாதம் ஷ்ரத்தாவை அஃப்தாப் கொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டி அதனை தனது ஃபிரிட்ஜ்-ல் வைத்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு துண்டை நாய்களுக்கு வீசியுள்ளார். ஷ்ரத்தா உயிருடன் இருந்தபோது, அஃப்தாப் உடன் தனக்கு இருக்கும் பிரச்சினை குறித்து தனது தோழி ஒருவரிடம் தெரிவித்து வந்துள்ளார். இந்நிலையில், ஷ்ரத்தாவிடம் இருந்து சில மாதங்களாக தொலைபேசி அழைப்பு வராததை அடுத்து, அவர் தொலைபேசியில் பேச முயன்றிருக்கிறார். ஆனால், ஷ்ரத்தாவின் ஃபோன் ஸ்விச் ஆஃப் செய்யப்பட்டிருந்துள்ளது. இதனால், இது குறித்து அவர் ஷ்ரத்தாவின் பெற்றோருக்கு தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, கடந்த நவம்பரில் ஷ்ரத்தாவின் பெற்றோர் தனது மகளை காணவில்லை என காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தனர். இதையடுத்தே, ஷ்ரத்தாவை, அஃப்தாப் கொலை செய்தது தெரியவந்தது.
முக்கிய செய்திகள்
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago