30 நதிகள் இணைப்பு திட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் தகவல்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: நதிகள் இணைப்பு தொடர்பாக 30 திட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மக்களவையில் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மக்களவையில் ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் நேற்று கூறியதாவது: நதிகள் இணைப்பு தொடர்பாக 30 திட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதில் 16 திட்டங்கள் தீபகற்ப நதிகள் தொடர்பானவை. 14 திட்டங்கள் இமயமலை நதிகள் தொடர்பானவை.

அனைத்து திட்டங்களுக்கும் சாத்தியக்கூறு அறிக்கைக்கு முந்தைய அறிக்கைகள் தயாராகிவிட்டன. 24 திட்டங்களுக்கு சாத்தியக்கூறு அறிக்கை தயாராகிவிட்டது. 8 திட்டங்களுக்கு விரிவான திட்ட அறிக்கை முடிந்துள்ளது. இதில் தீபகற்ப பகுதியில் கென்-பெட்வா நதிகள் இணைப்புக்கு மத்திய அரசு கடந்த 2021 டிசம்பரில் ஒப்புதல் அளித்துள்ளது. ரூ.44,605 கோடி செலவிலான இத்திட்டத்துக்கு மத்திய அரசு ரூ.39,317 கோடி வழங்கும். இவ்வாறு அமைச்சர் ஷெகாவத் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

7 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

23 hours ago

மேலும்