நாட்டிலேயே முதல்முறையாக தங்க நாணயம் வாங்க ஏடிஎம் - ஹைதராபாத்தில் திறப்பு

By செய்திப்பிரிவு

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் கோல்ட்சிக்கா நிறுவனம் தங்கத்தை விற்பதற்கு என்று ஏடிஎம் மெஷினை அமைத்துள்ளது.

இந்த ஏடிஎம் மெஷினில் 5 கிலோ தங்க நாணயங்கள் நிரப்பப்பட்டிருக்கும். இவை 24 காரட் மற்றும் 999 சான்றிதழ் பெற்ற நாணயங்கள் ஆகும். மக்கள் வாங்குவதற்கு ஏதுவாக 0.5 கிராம் முதல் 100 கிராம் வரையில் 8 ஆப்சன்கள் இந்த ஏடிஎம் மெஷினில் உள்ளன.

மக்கள் ஜுவல்லரிகளுக்குச் செல்லாமல், நேரடியாக இந்த ஏடிஎம்-க்கு வந்து தங்கள் டெபிட் அல்லது கிரிடிட் கார்டைப் பயன்படுத்தி தங்கம் வாங்கிச் செல்லலாம். அன்றைய விலை நிலவரத்தின் அடிப்படையில் தங்கத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.

இதுகுறித்து கோல்ட்சிக்கா நிறுவனத்தின் துணைத்தலைவர் பிரதாப் கூறும்போது, ‘‘ஹைதராபாத்தைச் சேர்ந்த ஓப்பன்க்யூப் டெக்னாலஜிஸ் என்ற ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் உதவியுடன் தங்க ஏடிஎம் அமைத்துள்ளோம். இது நாட்டின் முதல் தங்க ஏடிஎம் ஆகும். ஏடிஎம் அறையைச் சுற்றி கேமராக்களும் அலாரமும் பொருத்தப்பட்டுள்ளன. இதேபோல் நாடு முழுவதும் 3000 தங்க ஏடிஎம் அமைக்க திட்டமிட்டுள்ளோம்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

19 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

3 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்