பரேஷ் ராவலின் சர்ச்சைப் பேச்சு: மன்னிப்புக்கும் பதிலடி கொடுத்த மஹூவா மொய்த்ரா

By செய்திப்பிரிவு

கொல்கத்தா: குஜராத் தேர்தல் பிரச்சாரத்தில் கீழ்த்தரமான கருத்துகளை முன்வைத்து, அதற்காக மன்னிப்பு கோரியுள்ள நடிகரும், பாஜக பிரமுகருமான பரேஷ் ராவலுக்கு பதிலடி கொடுத்துள்ளார் திரிணமூல் எம்.பி. மஹூவா மொய்த்ரா.

குஜராத் மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பாரேஷ் ராவல், "சிலிண்டர் விலை குறையலாம். மக்களுக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கலாம். ஆனால், டெல்லியைப் போல் ரோஹிங்கியாக்கள், வங்கதேசத்தவர் இங்கே படையெடுத்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்? அப்போது காஸ் சிலிண்டரை வைத்து நீங்கள் என்ன செய்வீர்கள்? வங்காளிகளுக்கு மீன் சமைத்துக் கொடுப்பீர்களா? எனக்குத் தெரியும் குஜராத்திகளால் பணவீக்கத்தைக் கூட பொறுத்துக் கொள்ள முடியும். ஆனால் அவர்களால் நிச்சயம் அவர்களின் பக்கத்து வீட்டில் வங்காளியும், ரோஹிங்கியாவும் இருப்பதைப் பொறுத்துக் கொள்ள முடியாது" என்று பேசியிருந்தார். அவரது இந்தப் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் சாக்கெட் கோகலே இதற்கு கண்டனம் தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில், "வங்காள மக்களுக்கு நீங்கள் மீன் சமைத்துத் தர வேண்டியது இல்லை. நீங்கள் மகாராஷ்டிராவில் உங்கள் பணியை தொடங்கியபோது நாக்கள் வாஞ்சையோடு உங்களுக்கு தோக்லாவும், ஃபஃப்டாவும் செய்து கொடுத்தோம். வங்காளிகளுக்கு எதிரான உங்களின் அருவருப்பான கருத்தை திரும்பப் பெறுங்கள்" என்று பதிவிட்டிருந்தார்.

எதிர்ப்புகள் வலுத்த நிலையில், பாரேஷ் ராவல், "இங்கே மீன் பிரச்சினையில்லை. குஜராத்திகளும் மீன் சமைக்கின்றனர். ஆனால் நான் ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன். வங்காளிகள் என்று நான் குறிப்பிட்டது மேற்குவங்க மக்களை அல்ல, சட்டவிரோதமாக வங்கதேசத்தில் இருந்து குடியேறும் ரோஹிங்கியாக்களை. இருந்தும் கூட என் கருத்தால் யார் மனமேனும் புண்பட்டிருந்தால் நான் அதற்காக மன்னிப்பு கோருகிறேன்" என்று பதிவிட்டிருந்தார்.

பதிலடி கொடுத்த மஹூவா மொய்தரா: இந்த விளக்கத்தை ஏற்காத திரிணமூல் எம்.பி. மஹூவா மொய்த்ரா, பரேஷ் ராவலுக்கு ஒரு பதிலடி அவர் பாணியிலேயே கொடுத்துள்ளார். அவர் மன்னிப்பு கேட்டிருக்க வேண்டியதில்லை. அவர் சொன்ன கருத்து எனக்கு வங்காளிகளைப் போல் மூளை கொண்டிரு என்றே கேட்கிறது. இந்தியாவிலேயே மேற்குவங்கத்தில் தான் அதிகமான நோபல் பரிசு வென்றோர் இருக்கின்றனர் என்று பதிலடி கொடுத்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

1 day ago

மேலும்