இந்தியாவின் கதையை பகிர ஜி-20 தலைமை ஒரு நல்ல வாய்ப்பு: ஜெய்சங்கர்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்தியாவின் கதையை உலகிற்குப் பகிர ஜி-20 தலைமை ஒரு நல்ல வாய்ப்பு என்று வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

உலகில் பொருளாதார ரீதியாக சக்திவாய்ந்த 20 நாடுகளின் கூட்டமைப்பான ஜி20-ன் தலைமைப் பொறுப்பை இந்தியா இன்று முறைப்படி ஏற்றுள்ளது. இதை முன்னிட்டு பல்கலைக்கழகங்கள் அளவிலான கூட்டம் புதுடெல்லியில் நடைபெற்றது. இதில், நாடு முழுவதும் உள்ள 75 பல்கலைக்கழகங்களின் மாணவர்கள், பேராசிரியர்கள் , கல்வியாளர்கள், நிபுணர்கள் உள்ளிட்டோர் காணொலி வாயிலாக கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், ஜி20-ன் இந்திய ஒருங்கிணைப்பாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதில் பேசிய ஜெய்சங்கர், "ஜி-20 தலைமையை ஏற்றிருப்பது இந்தியாவுக்கு மிகப் பெரிய வாய்ப்பு. இதன்மூலம், இந்தியாவின் கதையை மற்ற நாடுகளோடு பகிர்ந்துகொள்ள முடியும். குறிப்பாக, தங்களின் சிறப்பான செயல்பாடுகளின் மூலம் இங்கு மாற்றத்தை நிழ்த்தியவர்கள் குறித்த கதைகளை நாம் பகிர முடியும். உலகில் தெற்கின் குரலாக நாம் மாறுவதற்கும் இது ஒரு நல்ல வாய்ப்பு. முக்கியமான இந்த தருணத்தில் இந்த வாய்ப்பு நமக்கு கிடைத்திருக்கிறது.

அதேநேரத்தில் உலகம் சவாலான காலகட்டத்தில் இருக்கும்போது நாம் இந்த வாய்ப்பை பெற்றுள்ளோம். அந்த வகையில் இது நமக்கும் ஒரு சவால்தான். வரும் ஓராண்டில் 200 ஜி20 கூட்டங்கள் நடைபெற உள்ளன. இந்தக் கூட்டங்கள் புதுடெல்லியை மையப்படுத்தியதாக இருக்காது. நாட்டின் அனைத்து மூலை முடுக்குகளையும் வெளிப்படுத்துவதாக இருக்கும். கரோனா தொற்றால் உலகம் பெரும் பாதிப்புகளை சந்தித்து வரும் நிலையில், இதனால் மிகவும் பாதிக்கப்பட்டவர்களின் பிரச்சினைகளை மட்டும் பேசுவதாக இல்லாமல், தீர்வை முன்வைப்பதாகவும் இந்தியாவின் தலைமைத்துவம் இருக்கும்" என்று தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய ஜி-20 அமைப்பின் இந்திய ஒருங்கிணைப்பாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா, "ஜி20-யின் தலைமையை இந்தியா ஏற்றிருப்பது மிகப் பெரிய தேசிய நிகழ்வு. இந்த வாய்ப்பின் மூலம் நாம் நமது கலாச்சாரத்தின் தொன்மையை உலகிற்கு உணர்த்த முடியும். சுற்றுலாவை இது ஊக்குவிக்கும். இந்த வாய்ப்பு எப்போதுமே நினைவில் நிற்பதாக நமது நாட்டிற்கு இருக்கும். அந்த வகையில் ஜி20 தலைமையை இந்தியா ஏற்றிருப்பது தனித்துவம் மிக்க வாய்ப்பு" என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

32 mins ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

மேலும்