புதுச்சேரி: புதுச்சேரி - மணக்குள விநாயகர் கோயிலிருந்து உயிரிழந்த லட்சுமி யானையின் இறுதி யாத்திரை மதியம் தொடங்கியது. நேரு வீதி, அண்ணா சாலை, கடலூர் சாலை வழியாக அடக்கம் செய்யும் வனத்துறை பின்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. ஏராளமான பக்தர்கள் உடன் வந்தனர்.
யாத்திரையின் போது போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தமிழகத்திலிருந்து கால்நடை பேராசிரியர் குழு மற்றும் வனத்துறை அதிகாரிகள் 18 பேர் உடற்கூறு அறுவைக்கான சாதனங்களுடன் வந்தனர். அதைத்தொடர்ந்து யானை லட்சுமிக்கு உடல் கூறு பரிசோதனை இரண்டு மணி நேரம் நடந்தது.
அப்போது யானையின் தந்தங்கள் எடுக்கப்பட்டு வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. அதையடுத்து யானை லட்சுமி உடல் குழியில் இறக்கப்பட்டது. அதில் 50 மூட்டைகள் உப்பு, விபூதி உள்ளிட்டவை தெளிக்கப்பட்டன. நிகழ்வுகள் அனைத்தும் இரவு 8 மணி அளவில் நிறைவடைந்தது. இந்நிகழ்வுகளில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்.
அமைச்சர்களில் லட்சுமி நாராயணன், தேனி ஜெயக்குமார் ஆகியோர் பங்கேற்ற சூழலில் முதல்வர் ரங்கசாமி பங்கேற்கவில்லை. அதேபோல் அமைச்சர்கள் நமச்சிவாயம், சந்திர பிரியங்கா, சாய் சரவணகுமார் பங்கேற்கவில்லை. நிகழ்வுகளில் பல எம்எல்ஏக்களும் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இந்தியா
17 mins ago
இந்தியா
22 mins ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
1 day ago