ஜன.4 வரை தமிழகத்துக்கு 2,000 கன அடி நீர்: கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

By இரா.வினோத்குமார்

ஜனவரி 4-ம் தேதி வரை தமிழகத் துக்கு காவிரியில் வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி நீரை திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காவிரி நதி நீர் பங்கீடு தொடர் பான வழக்கை விசாரித்த காவிரி நடுவர் மன்றம் கடந்த 2007-ல் இறுதி தீர்ப்பை வழங்கியது. இதை எதிர்த்து கர்நாடகா, தமிழகம், கேரளா ஆகிய மூன்று மாநிலங்களும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்தன. இம்மனுக்கள் மீதான விசாரணையில் மத்திய அரசின் வாதத்தை நிராகரித்த நீதிபதிகள், மாநில அரசுகளின் மேல்முறையீட்டு மனுக்களை விசாரிக்க உச்ச நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளது என கடந்த வாரம் உத்தரவிட்டனர்.

இந்நிலையில் இவ்வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமித்வ ராய், ஏ.என்.கான்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, “ஏற்கெனவே பிறப்பித்த இடைக்கால உத்தரவின்படி வருகிற ஜனவரி 4-ம் தேதி வரை தமிழகத்துக்கு காவிரியில் வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி நீரை கர்நாடக அரசு திறந்துவிட வேண்டும்''என உத்தரவிட்டனர்.

அடுத்தகட்ட விசாரணை ஜனவரி 4-ம் தேதிக்கு ஒத்திவைக் கப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

மேலும்