புது டெல்லி: இந்திய குடியரசு தின விழாவை முன்னிட்டு டெல்லியில் நடைபெறும் சிறப்பு அணிவகுப்பு நிகழ்ச்சிக்கு, நட்பு நாடுகளின் தலைவர்களை சிறப்பு விருந்தினர்களாக அழைப்பது வழக்கம்.
கடந்த ஜனவரியில் நடந்த குடியரசு தின விழாவில் 5 மத்திய ஆசிய குடியரசு நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். இவர்கள் டெல்லியில் நடந்த இந்தியா - மத்திய ஆசிய மாநாட்டில் பங்கேற்றனர்.
அடுத்தாண்டு ஜனவரியில் நடைபெறும் குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க எகிப்து அதிபர் அப்தெல் ஃபதா அல்-சிசியை அழைக்க முடிவு செய்யப்பட்டது. பிரதமர் மோடியின் இந்த அழைப்பை, எகிப்து அதிபர் அல்-சிசியிடம், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கடந்த அக்டோபர் 16-ம் தேதி வழங்கினார். அதை அவர் ஏற்றுக் கொண்டார். இரு நாடுகள் இடையே தூதரக உறவுகள் ஏற்பட்டு இந்தாண்டுடன் 75 ஆண்டுகள் ஆகிறது. இந்தியா தலைமையில் 2022 - 23ம் ஆண்டில் நடைபெறும் ஜி-20 கூட்டத்தில் விருந்தினராக கலந்து கொள்ளவும் எகிப்துக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago