ஸ்ரீநகர்: காஷ்மீர் புலனாய்வு துறை (எஸ்ஐஏ) அதிகாரிகள் நேற்று கூறியதாவது. தீவிரவாதம், பிரிவினைவாதம் மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளை ஊக்குவிப்பதாக குற்றம் சாட்டப்பட்ட அமைப்புகள் மீது தொடர்ச்சியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக தடை செய்யப்பட்ட அமைப்பான ஜமாத் இ-இஸ்லாமி அமைப்புக்குச் சொந்தமான 11 சொத்துகளை கண்டறிந்து பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், ஜம்மு-காஷ்மீர் அனந்தநாக் மாவட்டத்தில் அந்த அமைப்புக்குச் சொந்தமான ரூ.90 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. ஜம்மு-காஷ்மீரில் ஜமாத்துக்கு சொந்தமான 200-க்கும் மேற்பட்ட சொத்துகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த மாத தொடக்கத்தில் 2 பள்ளி கட்டடங்கள் உள்பட ஷோபியான் மாவட்டத்தில் அந்த அமைப்புக்குச் சொந்தமான 9 சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இவ்வாறு எஸ்ஐஏ தெரிவித்துள்ளது. ஜமாத் இ-இஸ்லாமி என்பது ஜம்மு-காஷ்மீரில் செயல்பட்டு வந்த மிகப்பெரிய அரசியல், மத அமைப்பாகும். தீவிரவாதத்தை ஆதரித்து வந்த தால் இந்த அமைப்பு 2019-ல் தடை செய்யப்பட்டது.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago