தெலங்கானா மாநிலத்தின் தூதராக சானியா மிர்ஸா நியமனம்

டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா, தெலங்கானா மாநிலத் தின் `நல்லெண்ண தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.

உலக டென்னிஸ் கூட்டமைப் பின் தரவரிசைப் பட்டியலில் இரட்டையர் பிரிவில் சானியா மிர்ஸா 5-வது இடத்தைப் பிடித்து சாதனை புரிந்துள்ளார்.

இந்நிலையில், தெலங்கானா மாநிலத்தின் நல்லெண்ண தூத ராக சானியா மிர்ஸா நியமிக் கப்பட்டுள்ளார்.

சானியா மிர்ஸா வுக்கு ஒரு கோடி ரூபாய்க்கான காசோலை மற்றும் தெலங் கானாவின் நல்லெண்ணத் தூதராக நியமிக்கப்பட்டதற்கான நியமன கடிதம் ஆகியவற்றை தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகர ராவ் வழங்கினார்.

இது குறித்து முதல்வர் சந்திர சேகர ராவ் கூறியதாவது:

டென்னிஸ் வீராங்கனையான சானியா, ஹைதராபாத்காரர் என்பதில் நம் அனைவருக்கும் பெருமை. இவரை தெலங்கானா மாநிலத்தின் ‘தூதராக நிய மனம் செய்வதில் மிக பெருமை அடைகிறேன். இவர் தெலங்கானா மாநிலத்தின் பிரதிநிதியாக, நம் நாட்டில் மட்டுமின்றி, வெளிநாட்டி லும் நமது வளர்ச்சிக்காக பாடு படுவார் என நம்புகிறேன். தற் போது உலக தர வரிசையில் 5-ம் இடத்தில் உள்ள சானியா, விரை வில் முதலாம் இடத்திற்கு வந்து நமது நாட்டிற்கும், தெலங்கானா மாநிலத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்றார்.

இந்நிகழ்ச்சியில், மாநில தலைமைச் செயலாளர் ராஜீவ் சர்மா, தொழிற்சாலை துறை சிறப்பு பொதுச்செயலாளர் பிரதீப் சந்திரா மற்றும் அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE