அகமதாபாத்: குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் பாஜக பிரமுகர்கள் 12 பேர் அக்கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளனர்.
குஜராத் சட்டப்பேரவைக்கு டிசம்பர் 1, 5 ஆகிய தேதிகளில் 2 கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இரண்டு கட்ட தேர்தலுக்கான மனு தாக்கல், பரிசீலனை, மனு திரும்பப் பெறுதல் ஆகியவை முடிந்துள்ளன. முதல்கட்ட தேர்தலுக்கு இன்னும் 1 வாரமே உள்ளது.
6 முறை எம்எல்ஏ: இந்நிலையில் டிச.5-ம் தேதி நடைபெறும் 2-ம் கட்ட தேர்தலில்பாஜகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களுக்கு எதிராக போட்டியிடும் 12 பேர், கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்படுவதாக மாநில பாஜக தலைவர் சி.ஆர்.பாட்டீல் நேற்று அறிவித்தார். இவர்களில் 6 முறை எம்எல்ஏவாக இருந்த மது ஸ்ரீவத்சவ் மற்றும் 2 முன்னாள் எம்எல்ஏக்களும் அடங்குவர்.
இரண்டாம் கட்ட தேர்தலில் வேட்பு மனுக்களை வாபஸ் பெற நவம்பர் 21 கடைசி நாளாகும். எனினும் இவர்கள் தங்கள் வேட்பு மனுவை வாபஸ் பெறாததால் இவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
» இந்துக்களுக்கு சிறுபான்மையினர் அந்தஸ்து - மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் 6 வாரம் அவகாசம்
» மங்களூரு குண்டு வெடிப்பு வழக்கு விரைவில் என்ஐஏ வசம் ஒப்படைக்கப்படும்: கர்நாடக டிஜிபி
டிச. 1-ம் தேதி நடைபெறும் முதல்கட்ட தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் 7 பாஜகவினரை அக்கட்சி கடந்த சில நாட்களுக்கு முன் சஸ்பெண்ட் செய்திருந்தது. இந்நிலையில் தற்போது மேலும் 12 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டவர்கள்.
முக்கிய செய்திகள்
இந்தியா
16 mins ago
இந்தியா
27 mins ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago