காஷ்மீர் வங்கியிலிருந்து ரூ.8 லட்சம் கொள்ளை: தீவிரவாதிகள் கைவரிசையா?

By பீர்சதா ஆஷிக்

ஜம்மு - காஷ்மீரில் அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கி முனையில் மிரட்டி, வங்கியிலிருந்து 8 லட்சத்துக்கும் அதிகமான தொகையை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

காஷ்மீரிலிருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள புல்வமா நகரில் வங்கி ஒன்றில் இன்று (வியாழக்கிழமை) மதியம் அடையாளம் தெரியாத நான்கு நபர்கள் கையில் துப்பாக்கியுடன் நுழைந்தனர்.

பின்னர் அங்கிருந்த ஊழியர்களை துப்பாக்கி முனையில் மிரட்டி வங்கியிலிருந்து ரூபாய் 8 லட்சத்துக்கும் அதிகமான தொகையை கொள்ளையடித்துச் சென்றதாக போலீஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

இந்தக் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார் என்றும், எவ்வளவு பணம் கொள்ளையடிக்கப்பட்டது என்பது குறித்தும் உறுதியான தகவலை பாதுகாப்புப் படையினர் தெரிவிக்கவில்லை.

பணமதிப்பு நீக்க நடவடிக்கையால், தீவிரவாதிகள் புதிய நோட்டை வங்கியிலிருந்து கொள்ளையடித்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக நவம்பர் 21-ம் தேதி காஷ்மீரின் புத்கம் மாவட்டத்திலுள்ள வங்கி ஒன்றிலிருந்து 14 லட்சத்தை லஷ்கர் -இ- தொய்பா அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் கொள்ளையடித்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

44 mins ago

இந்தியா

58 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

மேலும்