புதுடெல்லி: டெல்லியில் நடந்த ஷிரத்தா கொலை வழக்கில் நாள்தோறும் புதிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஷிரத்தாவும், அப்தாப்பும் ஒன்றாக வாழ்ந்து வந்ததால், அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க ஷிரத்தாவின் பெற்றோர் முடிவு செய்தனர். இதுதொடர்பாக பேசுவதற்காக கடந்த 2019-ம் ஆண்டு அப்தாப் வீட்டுக்கு ஷிரத்தாவின் தந்தை விகாஸ் வால்கர், தாய் ஹர்சிலா ஆகியோர் சென்றுள்ளனர்.
ஆனால் ஷிரத்தாவின் குடும்பத்தை அவமானப்படுத்தியதுடன், இனிமேல் தங்கள் வீட்டுக்கு மீண்டும் வரவேண்டாம் எனவும் கூறியுள்ளனர். இந்த திருமணம் நடந்திருந்தால், ஷிரத்தாவுக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்காது என அவரது தந்தை கூறினார். ஷிரத்தா தனது தந்தையின் பேச்சை கேட்காமல், அப்தாப்புடன் தொடர்ந்து வசித்து வந்துள்ளார். அப்தாப் தன்னை கொடுமைப்படுத்துவதாக, ஷிரத்தா தன் தாயிடம் கூறியுள்ளார்.
தனது தாயின் மரணத்துக்குப் பின் தந்தையிடமும் இதே தகவலை தெரிவித்துள்ளார். வீட்டுக்கு திரும்பி வரும்படி ஷிரத்தாவிடம் அவரது தந்தை கூறியுள்ளார். ஆனால் அவர் அப்தாப்புடன் டெல்லி சென்றுவிட்டார். இந்த விஷயமும் ஷிரத்தாவின் தந்தைக்கு தெரியாது. பல மாதங்கள் மகளுடன் தொடர்பு இல்லாமல் விகாஸ் வால்கர் இருந்துள்ளார். அப்தாப் குடும்பத்தினர் தலைமறைவாக உள்ளனர். அவர்களைப் போலீஸார் தேடி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
3 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago