வெராவல்: பாஜக அனைத்து வாக்குச்சாவடியிலும் வெற்றி பெறுவதே குஜராத் தேர்தலில் எனது இலக்கு என்று பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார்.
குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலை ஒட்டி சோம்நாத் மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட பிரதமர் நரேநந்திர மோடி வெராவல் தொகுதி மக்கள் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பாஜகவுக்கு வெற்றியைத் தர வேண்டும் என்று கோரினார்.
குஜராத் சட்டப்பேரவைக்கு வரும் டிசம்பர் 1 மற்றும் 5 ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.
இதனையொட்டி பிரதமர் நரேந்திர மோடி அவ்வப்போது குஜராத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் இன்று கிர் சோம்நாத் மாவட்டம் வெராவல் தொகுதியில் நடந்த பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, "பாஜக ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் வெற்றி பெறுவதை நீங்கள் உறுதி செய்ய வேண்டும். இதை நீங்கள் எனக்காக செய்வீர்களா? இந்த 4 தொகுதிகளிலும் பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெற்று அவர்கள் சட்டப்பேரவைக்கு செல்வதை உறுதி செய்யுங்கள். இந்த முறை எனது இலக்கு எல்லா வாக்குச்சாவடிகளிலும் பாஜகவே வெற்றி பெற வேண்டும் என்பதே" என்றார்.
குஜராத் சட்டப்பேரவையில் 182 தொகுதிகள் உள்ளன. தேர்தலில் பாஜக, ஆம் ஆத்மி, காங்கிரஸ் களத்தில் உள்ளன.
முக்கிய செய்திகள்
இந்தியா
30 mins ago
இந்தியா
2 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago