ஹைதராபாத்: தெலுங்கு திரையுலகின் மூத்த நடிகரும், முன்னாள் எம்பியும், நடிகர் மகேஷ் பாபுவின் தந்தையுமான தெலுங்கு சூப்பர் ஸ்டார் கிருஷ்ணா, நேற்று முன்தினம் மருத்துவமனையில் மாரடைப்பால் காலமானார்.
இந்நிலையில் ஹைதராபாத்தில் உள்ள அவரது வீட்டிலிருந்து உடல், நேற்று காலை, நடிகர் கிருஷ்ணாவுக்கு சொந்தமான பத்மாலயா ஸ்டுடியோவுக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு ரசிகர்கள் இறுதி அஞ்சலி செலுத்தும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, கிருஷ்ணாவின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மேலும், நடிகர்கள் சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா, சரத்குமார், நடிகை ஜெயப்பிரதா, வரலட்சுமி உள்ளிட்ட பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் நடிகர் கிருஷ்ணாவின் உடல் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வேன் மூலம் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள மின் மயானத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது வழி நெடுகிலும் திரளான ரசிகர்கள் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். மின் மயானத்தில் இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டன. பின்னர் அங்கு அரசு மரியாதையுடன் நடிகர் கிருஷ்ணாவின் உடல் தகனம் செய்யப்பட்டது.
» வாரணாசியில் தமிழக அரசு சார்பில் பணிகள் மும்முரம்: பாரதியார் வாழ்ந்த அறை நினைவிடமாக மாறுகிறது
» ரயில்வே உணவுப் பட்டியல் மாற்றம் - நீரிழிவு நோயாளிகளுக்கு சிறப்பு உணவு வழங்க ஏற்பாடு
முக்கிய செய்திகள்
இந்தியா
4 mins ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
18 hours ago