திருப்பதி திருமலையில் நேற்று தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி சாம்பசிவ ராவ் கூறியதாவது:
மத்திய அரசு 500, 1,000 ரூபாய் நோட்டுகளை வாபஸ் பெற்றுள்ளதால், திருப்பதி மற்றும் திருமலையில் பக்தர்கள் இன்னல் களுக்கு ஆளாகி வருகின்றனர். தனியார் ஓட்டல்களில் சில்லறை தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதால் பலர் சாப்பிட முடியாமல் பட்டினி கிடக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
எனவே திருமலைக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் பால், தேனீர், சிற்றுண்டி, மதிய உணவு, இரவு உணவு ஆகியவை இலவச மாக வழங்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. தங்கும் அறைகளுக்கு பணம் செலுத்த வசதியாக டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தும் இயந்திரங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. மேலும் பஸ் நிலையம், ரயில் நிலையம், திருமலையில் உள்ள மத்திய வரவேற்பு அலுவலகம், திருப்பதியில் உள்ள ஸ்ரீநிவாசம், விஷ்ணு நிவாசம் உள்ளிட்ட தங்கும் விடுதிகளிலும் இந்த வசதி செய்து தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதனை தொடர்ந்து திருமலை, திருப்பதியில் டெபிட், கிரெடிட் கார்டுகள் மூலம் பணம் செலுத்தும் இயந்திரங்கள் அமைக்கப்பட்டது. இதற்கு பக்தர்கள் மிகுந்த வரவேற்பு தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago