2017 குஜராத் சட்டப் பேரவைத் தேர்தலில் 1,000% கூடுதலாக செலவு செய்த வேட்பாளர்கள்

By செய்திப்பிரிவு

அகமதாபாத்: கடந்த 2017-ல் ஆண்டு நடந்த குஜராத் பேரவைத் தேர்தல் செலவு குறித்து மும்பை டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் சோஷியல் சயின்ஸஸ் (டிஐஎஸ்எஸ்), அமெரிக்காவைச் சேர்ந்த பிலடெல்பியா டெம்பிள் யூனிவர்சிட்டி, நாஷ்வில் வான்டர்பில்ட் யூனிவர்சிட்டியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு நடத்தினர்.

இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

2017-ம் ஆண்டில் குஜராத் மாநில சட்டப்பேரவைக்குத் தேர்தல் நடைபெற்றது. அப்போது தேர்தல் ஆணைய விதிகளின்படி வேட்பாளர் ஒருவர் ஒரு தொகுதிக்கு ரூ.28 லட்சம் மட்டுமே செலவு செய்ய முடியும்.

ஒரு வாக்காளருக்கு ரூ.45: மேலும் ஒரு வாக்காளருக்கு ரூ.45 வரை மட்டுமே ஒரு வேட்பாளர் செலவு செய்ய முடியும் என்ற நிலை இருந்தது. ஆனால் விதிகளை மீறி ஒரு வாக்காளருக்கு ரூ.459 என்ற அளவில் செலவு செய்யப்பட்டுள்ளது. அதாவது 10 மடங்குக்கும் (1,000%) அதிகமாக செலவு செய்யப்பட்டுள்ளது.

அகமதாபாதிலுள்ள வாலட்சிட்டி தொகுதியிலும், கேடாதொகுதியிலும் இந்த ஆய்வைஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டனர். அகமதாபாத் வாலட் சிட்டியில் போட்டியிட்ட காங்கிரஸ்வேட்பாளர், தான் அதிகாரப்பூர்வமாக ரூ.13.4 லட்சம் செலவு செய்துள்ளதாகவும், பாஜக வேட்பாளர் தான் ரூ.10.5 லட்சம் செலவு செய்துள்ளதாகவும், சுயேச்சை வேட்பாளர் ஒருவர் ரூ.2.7 லட்சம் செலவு செய்திருப்பதாகவும் தேர்தல் ஆணையத்திடம் கணக்கு காட்டியுள்ளனர்.

மேலும் காப்பட்வன்ச் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ரூ.9.7 லட்சமும், பாஜக வேட்பாளர் ரூ.11.8 லட்சம் செலவு செய்துள்ளனர்.

ஆனால் வேட்பாளர்கள் செய்த செலவுகள் குறித்து டிஐஎஎஸ்எஸ் ஆராய்ச்சியாளர் அஸ்வனி குமார், டெம்பிள் பல்கலைக்கழகத்தின் சவுரதீப் பானர்ஜி, வான்டர்பில்ட் பல்கலைக்கழகத்தின் சஷ்வத் தர் ஆகியோர் தீவிரமாக ஆய்வு செய்துள்ளனர்.

ஆய்வில் தகவல்: இதன்மூலம் அகமதாபாத், காப்பட்வன்ச் தொகுதிகளில் வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் கூட்டம், பேரணி நடத்துவதற்கு ரூ.16 லட்சம் முதல் ரூ.28 லட்சம்வரையும், நட்சத்திர பேச்சாளர்களின் கூட்டத்தை ஏற்பாடு செய்வதற்கு ரூ.15 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரையில் ஒவ்வொருவரும் ஒரு தொகுதிக்கு தலா ரூ.57 லட்சம் முதல் ரூ.1.16 கோடி வரை செலவு செய்துள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆனால் தலைமைத் தேர்தல் ஆணையத்தில் கணக்கு காட்டும்போது, செய்த செலவைக் குறைத்து மதிப்பிட்டுக் கணக்குக் காட்டியுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்