மெயின்புரி மக்களவை தொகுதி இடைத்தேர்தல்: அகிலேஷ் மனைவி டிம்பிள் மனு தாக்கல்

By செய்திப்பிரிவு

லக்னோ: உ.பி.யின் மெயின்புரி மக்களவை தொகுதி உறுப்பினரும் சமாஜ்வாதி கட்சி நிறுவனருமான முலாயம் சிங் யாதவ் கடந்த அக்டோபர் 10-ம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். இதனால், காலியாக இருந்த மெயின்புரி மக்களவை தொகுதிக்கு வரும் டிசம்பர் 5-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கி உள்ளது.

இந்நிலையில், மெயின்புரி தொகுதியில் சமாஜ்வாதி சார்பில் அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் மனைவி டிம்பிள் யாதவ் போட்டியிடுவார் என கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, டிம்பிள் யாதவ் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். அவருடன் அகிலேஷ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மட்டுமே இருந்தனர்.

மெயின்புரி மக்களவை தொகுதியில் இதுவரை நடந்த தேர்தலில் சமாஜ்வாதி 9 முறை (2 இடைத்தேர்தல்) வெற்றி பெற்றுள்ளது. இதில் 5 முறை முலாயம் சிங் யாதவ் வென்றுள்ளார். 2004 முதல் இந்தத் தொகுதி சமாஜ்வாதி வசமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

59 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்