நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரின்போது, 500, 1000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறும் விவ காரம் பற்றி காங்கிரஸ் கட்சிக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜு கூறும்போது, “அதிக மதிப்பு கொண்ட பழைய ரூபாய் நோட்டு கள் திரும்பப் பெறப்படும் என்ற பிரதமர் மோடியின் துணிச்சலான அறிவிப்பால் பொதுமக்கள் பலர் சிரமப்படுகின்றனர். ஆனால், இந்த நடவடிக்கையால் கறுப்புப் பணம், கள்ள நோட்டுகள், சட்ட விரோத பணப்பரிமாற்றம் உள் ளிட்ட தீவிரவாதத்தை ஊக்கு விக்கும் நடவடிக்கைகள் கட்டுப் படுத்தப்படும்.
இதனிடையே இந்த நடவடிக் கையை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குறை கூறி வரு கின்றன. 16-ம் தேதி தொடங்கவுள்ள நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் இதுகுறித்து பிரச்சினை எழுப்பினால் உரிய பதிலடி கொடுக்க அரசு தயாராக உள்ளது.
எதிர்க்கட்சியினர் இந்தப் பிரச்சினையை அரசியலாக்காமல் ஒன்றிணைந்து கறுப்புப் பணத்தை எதிர்த்துப் போரிட முன்வர வேண்டும்” என்றார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
4 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago