எல்லையில் பதற்றம் தொடரும் வரை.... : இந்திய - சீன உறவு குறித்து மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: "எல்லையில் பதற்றம் நிலவும் வரை சீனாவுடனான உறவில் சுமுகத்தன்மை இருக்காது" என்று மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். மேலும் இந்திய தரப்பில் இருந்து ஒத்துழைப்பில் எந்த சிக்கலும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்று நடத்திய உலகத் தலைவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் வியாழக்கிழமை கலந்து கொண்டார் அதில் பேசிய அவர், "எல்லைப்பகுதியில், உடன்படிக்கையை கடைபிடித்து, அமைதியை நிலைநாட்டுவதற்கான முயற்சியை சீன அரசு மேற்கொள்ளாத வரையில் இருநாட்டு உறவு சுமுகமாக தொடர முடியாது.

அனைத்து உடன்படிக்கைகளும் ஒரு தரப்பில் இருந்து மட்டுமே கடைபிடிக்கப்படுகின்றன. அது எந்த தரப்பு என்பது உங்களுக்குத் தெரியும். பிரச்சினையின் மையப்புள்ளியே இதுதான். கல்வான் பிரச்சினையின் போது சில பிரச்சினைகள் இருந்ததா என்றால் இருந்தது. எல்லைக்கருகில் வீரர்களை நிலைநிறுத்துவது போன்ற சில புள்ளிகள் சிக்கல்களாக இருந்திருக்கின்றன. நாம் அதிலிருந்து வெகுதூரம் முன்னேறி வந்திருக்கிறோம். இருநாட்டின் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு சில சிக்கல் களையப்பட்டுள்ளன.

இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியது இருக்கிறது. அது இயல்பானது என்றே நான் கருதுகிறேன். அதற்காக தொடர்ந்து முயற்சிப்பது, அதுகுறித்து அழுத்தம் கொடுப்பது மூலம் அதனைச் செய்ய முடியும். ஏனெனில் இது தற்போது கடினமானதாகவும், சிக்கலுக்குள்ளானதாகவும் மாறியுள்ளது. நாங்கள் அதனைச் செய்யமுடியாது என்று சீனா சொல்ல வேண்டாம்.

பல்வேறு கொள்கைகள், உறுதிமொழிகள், இருநாட்டு உறவுகளில் நாங்கள் நிறைய செய்துவிட்டோம். நீங்கள் (சீனா) இடைநிலை பார்வையாளராக இருந்து தற்போது கடைபிடிக்கப்படும் அனைத்து விஷயங்களும் சரியாக உள்ளது. இதில் எந்த தரப்புக்கும் எந்த விதமான பாதிப்பும் ஏற்படாது. இதனை மாற்றம் இல்லாமல் ஏற்றுக்கொள்ளலாம் என்று பரிந்துரைப்பீர்களா, அப்படி செய்யமாட்டீர்கள் என்று நான் நினைக்கிறேன்.

இந்திய - சீன எல்லையில் தற்போது உள்ள நிலையில் மாற்றம் ஏற்படாத வரையில் இருநாட்டு உறவிலும் சுமூகமான தன்மை ஏற்படாது. இந்த போக்கு சீனாவின் பாதுகாப்புக்கம் உகந்தது இல்லை" என்றார்.

சமீபத்தில் ரஷ்யாவிற்கு சென்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சர், தலைவர்களை மத்திய அமைச்சர் சந்தித்திருந்தார். இதனைத்து தொடர்ந்து ரஷ்யா - உக்ரைன் விவகாரத்தில் இந்தியாவின் கருத்து குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர், "ரஷ்யா - உக்ரைன் ஆகிய இருநாடுகளும் தற்போது இருக்கும் நிலையில் இருந்து இறங்கி வராத நிலையில், இரு நாடுகளுக்கும் இடையில் இந்தியா சமாதான பேச்சுவார்த்தை நடத்த தலைமை தாங்குவது முதிர்ச்சியற்றதாக இருக்கும்.

இது போருக்கான நேரம் இல்லை என்று உலகநாடுகள் கருதுகின்றன. இதையேதான் கடந்த செப்டம்பர் மாதம் உஸ்பெகிஸ்தானில் நடந்த ரஷ்ய அதிபர் புதினுடனான சந்திப்பின் போது இந்திய பிரதமர் அவரிடம் வழியுறுத்தியுள்ளார். இந்த விவகாரத்தில் இரண்டு நாடுகளும் போர்க்களதில் இருந்து வெளியேறி, தங்களுடைய நிலைப்பாடுகளில் இறங்கி, நேர்மறையான போக்குடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும்.

கடந்த 2008 பொருளாதார மந்தநிலை, கோவிட் பெருந்தொற்று காரணமாக உலகின் உற்பத்தி திறன் பாதிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகளுக்கான உணவு வழங்கலின் எல்லைகள் சுருங்கி விட்டன. உக்ரைன் போரும், காலநிலை மாற்றமும் அதனை இன்னும் மோசமாக்கி உள்ளது. இன்னும் பத்து ஆண்டுகளுக்கு இது போன்ற ஏற்ற இறக்கமான போக்குதான் நிலவும் என்று தெரிகிறது. இந்த பிரச்சினை விரைவில் தீருவதற்கான சூழல் இல்லை.

அதேநேரத்தில் இந்த கொந்தளிப்பான சிக்கலான சூழலுக்குள் இந்தியா ஒன்றிணைந்து பயணிக்க வேண்டிய தேவை இருக்கிறது. இதற்காக இந்தியாவில் சரியான சிலவிசயங்களை செய்தாக வேண்டும். உள்நாட்டின் பலத்தை பெருக்க வேண்டும். அதற்காக, நிலையான அரசாங்கம், ஆட்சி நிர்வாகத்தை உருவாக்க வேண்டும்" இவ்வாறு மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்