லக்னோ: உத்தர பிரதேச முன்னாள் முதல்வரும் சமாஜ்வாதி கட்சியின் நிறுவனருமான முலாயம் சிங் யாதவ் உடல்நலக் குறைவால் கடந்த மாதம் 10-ம் தேதி காலமானார். இதனால் காலியான அவரது மெயின்புரி மக்களவைத் தொகுதிக்கு டிசம்பர் 5-ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்தொகுதி வேட்பாளராக முலாயம் மருமகளும் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவின் மனைவியுமான டிம்பிள் யாதவ் (44) பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2009-ல் பெரோஸாபாத் மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட டிம்பிள் யாதவ், நடிகர் ராஜ் பப்பரிடம் தோல்வி அடைந்தார்.
2012-ல் அகிலேஷ் உ.பி. முதல்வர் ஆனதால் தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். அவரது கன்னோஜ் தொகுதியில் டிம்பிள் போட்டியின்றி தேர்வானார். 2014-ல் கன்னோஜில் மீண்டும் வெற்றி பெற்ற டிம்பிள், 2019-ல் அங்கு பாஜக வேட்பாளரிடம் தோல்வி அடைந்தார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago