மாவோயிஸ்ட் விவகாரத்தை மென்மேலும் சீர்கேடடையச் செய்ய வேண்டாம், சுமுகமான அமைதித் தீர்வு காண வழிவகை செய்யவும் என்று பாஜக ஆளும் சட்டீஸ்கர் மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது.
மேலும் டெல்லி பல்கலைக் கழக பேராசிரியர் நந்தினி சுந்தரை நவம்பர் 15-ம் தேதி வரை கைது செய்ய மாட்டோம் என்று சட்டீஸ்கர் அரசு உத்தரவாதம் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நந்தினி சுந்தரை பிரதிநித்துவம் செய்த வழக்கறிஞர் அசோக் தேசாய் கோர்ட்டில் கூறும்போது, “சமூக ஆர்வலர்கள், மக்கள் பணியாளர்களும் தற்போது விரோதிகளாகி விட்டனர்” என்று அரசின் மீது வாதம் தொடுத்தார்.
சட்டீஸ்கர் மாநில மாவோயிஸ்ட் ஆதிக்க சுக்மா மாவட்டத்தில் பழங்குடியினர் ஒருவர் கொல்லப்பட்டது தொடர்பாக டெல்லி பேராசிரியர் நந்தினி சுந்தர் மற்றும் இரண்டு சமூக ஆர்வலர்கள் மீது சட்டீஸ்கர் மாநில போலீஸ் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்தது.
ஆனால் இவர்கள் அப்பகுதிக்குச் சென்றது மே மாதத்தில் ஆனால் நவம்பரில் நடந்த கொலையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளனர் இது மிகப்பெரிய விந்தை என்று வழக்கறிஞர் தேசாய் வாதிட்டார்.
அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, நந்தினி சுந்தருக்கு எதிராக போதிய ஆதாரங்கள் உள்ளன என்று வாதிட்டார்.
நீதிபதி லோகுர், “பஸ்தார் ரேஞ்ச் தலைமை இன்ஸ்பெக்டர் ஜெனரல் எஸ்.ஆர்.பி.கல்லுரி சிபிஐ-யினால் குற்றம்சாட்டப்பட்டவரா?” என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு அரசுதரப்பு சொலிசிட்டர் ஜெனரல், “இல்லையில்லை அவருக்கும் இந்த வழக்கிற்கும் தொடர்பில்லை. இது ஏற்கெனவே சிஐடி தலைமைச் செயலக விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.” என்றார்,
இதனையடுத்து நீதிபதி, “இந்நிலையில் குற்றம்சாட்டப்பட்டவர் மீதான கைது நடவடிக்கையை அடுத்த விசாரணை தேதி வரை நிறுத்தி வைக்கிறேன்” என்றார். இதற்கு மேத்தா கடும் எதிர்ப்பு தெரிவிக்க, வழக்கறிஞர் தேசாய், சட்ட அதிகாரி தனது ‘உணர்ச்சி’யைக் கட்டுப்படுத்தி கொள்ளவும் என்றார்.
“நான் நாட்டுக்காகவே இதனை எதிர்க்கிறேன்” என்றார். வழக்கை நவம்பர் 15-ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம், மேலும் நந்தினி சுந்தர் கைதுக்கும் தடை விதித்து, சட்டீஸ்கர் மாநில அரசிடமிருந்து உத்தரவாதமும் கோரியுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
30 mins ago
இந்தியா
37 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago