சிம்லா: இமாச்சல பிரதேசத்தில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கப்படும் என சட்டப்பேரவை தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பாஜக கூறியுள்ளது.
இமாச்சலப் பிரதேசத்தில் 12-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், அங்கு பாஜக தனது தேர்தல் அறிக்கையை நேற்று வெளியிட்டது. அதில் கூறியிருப்பதாவது:
இமாச்சலில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவோம். இதற்காக நிபுணர் குழு அமைக்கப்படும். இளைஞர்களுக்கு அதிகாரம் அளிக்கப்படும். அரசு ஊழியர்களுக்கு மரியாதை அளிக்கப்படும். மாநிலத்தில் மேலும் 5 மருத்துவக் கல்லூரிகள் கட்டப்படும். திறன் மேம்பாட்டுக்கு ரூ.900 கோடி நிதி ஒதுக்கப்படும். அரசு ஊழியர்களின் சம்பளத்தில் உள்ள வேறுபாடுகள் அகற்றப்படும். அரசு வேலையில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும். 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கப்படும். மாநிலத்தில் 8 லட்சம் பேருக்கு வேலை வழங்கப்படும்.
இவ்வாறு தேர்தல் அறிக்கையில் பாஜக கூறியுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
12 mins ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago