உ.பி.யின் மைன்புரி மக்களவை மற்றும் 5 பேரவை தொகுதிகளுக்கு டிசம்பர் 5-ல் இடைத்தேர்தல்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலம் மைன்புரி மக்களவைத் தொகுதி மற்றும் பல்வேறு மாநிலங்களில் காலியாக உள்ள 5 பேரவைத் தொகுதிகளுக்கு வரும் டிசம்பர் 5-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

உ.பி.யின் மைன்புரி தொகுதி எம்.பி.யாக இருந்த சமாஜ்வாதி கட்சி நிறுவனர் முலாயம் சிங் யாதவ் கடந்த மாதம் காலமானார். இதனால் காலியாக உள்ள அந்தத் தொகுதிக்கு டிசம்பர் 5-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.

இதேபோல் காலியாகவுள்ள உ.பி.யின் ராம்பூர், ஒடிசாவின் பதம்பூர், ராஜஸ்தானின் சர்தார்ஷஹர், பிஹாரின் குர்ஹானி, சத்தீஸ்கரின் பானுபிரதாப்பூர் ஆகிய பேரவைத் தொகுதிகளுக்கும் டிசம்பர் 5-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும். இந்தத் தொகுதிகளில் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 8-ம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் வெளியாகும். இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஆசம் கான் பதவி பறிப்பு: உத்தரபிரதேசத்தின் ராம்பூர் தொகுதி எம்எல்ஏவாக சமாஜ்வாதி கட்சியின் ஆசம் கான் இருந்தார். மதவெறுப்பு பேச்சு காரணமாக சிறைத் தண்டனை பெற்றதால் அவரது எம்எல்ஏ பதவி பறிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. டிசம்பர் 8-ம் தேதி குஜராத், இமாச்சல பிரதேச சட்டப் பேரவைத் தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கையும் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

மேலும்