சிம்லா: சுதந்திரத்துக்குப் பிறகு 1952-ல் முதல் மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. தட்பவெப்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு இமாச்சல பிரதேசத்தில் பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதியில் 1951 அக்டோபரில் தேர்தல் நடத்தப்பட்டது.
அப்போது கின்னவூர் மாவட்டம், மண்டி மக்களவை தொகுதிக்கு உட்பட்ட கல்பா வாக்குச் சாவடியில், பள்ளி ஆசிரியராக இருந்த ஷியாம் சரண் நேகி காலை 7 மணிக்கு முதல் வாக்காளராக தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார். தற்போது அவருக்கு 106 வயதாகிறது.
இந்த சூழலில் இமாச்சல் பேரவைத் தேர்தல் வரும் 12-ம் தேதி நடைபெறுகிறது. வயது முதுமை, உடல்நலக் குறைவு காரணமாக இந்த முறை வாக்குச் சாவடிக்கு செல்ல முடியாத நிலையில் நேகி உள்ளார். இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் அவர் தபால் வாக்கினை செலுத்தினார்.
இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், “இளம் தலைமுறையினருக்கு நேகி முன்னுதாரணமாக திகழ்கிறார். நாட்டின் ஜனநாயகத்தை அவர் வலுப்படுத்தி உள்ளார்" என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
28 mins ago
இந்தியா
33 mins ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
1 day ago