ராஞ்சி: ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், நிலக்கரி சுரங்க குத்தகையை தனக்கே வழங்கிக் கொண்டார் என தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார் செய்தது. இதை பரிசீலித்த தேர்தல் ஆணையம், அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநருக்கு பரிந்துரை செய்தது. ஆளுநர் இன்னும் முடிவு எடுக்கவில்லை.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள அமலாக்கத் துறை, ராஞ்சி அலுவலகத்தில் நேற்று நேரில் ஆஜராகுமாறு சோரனுக்கு சம்மன் அனுப்பியது.
இதன்படி, சோரன் நேற்று அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜராகவில்லை. மாறாக தனது வீட்டுக்கு வெளியே கூடியிருந்த கட்சியினர் முன்பு பேசும்போது, “மத்திய அரசு, தங்களுக்கு எதிராக பேசுவோரின் குரலை ஒடுக்க அரசியல் சாசன அமைப்புகளை தவறாக பயன்படுத்துகிறது. நான் தவறு செய்திருந்தால், ஏன் விசாரணை நடத்துகிறீர்கள். முடிந்தால் கைது செய்யுங்கள்” என்றார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago