சட்டவிரோத சுரங்க வழக்கு | ஜார்கண்ட் முதல்வருக்கு அமலாக்க இயக்குநரகம் சம்மன் 

By செய்திப்பிரிவு

ராஞ்சி: ஜார்கண்ட் சட்டவிரோத சுரங்க வழக்கில் பணமோசடி தொடர்பாக வியாழக்கிழமை விசாரணைக்கு ஆஜராகும் படி அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு அமலாக்க இயக்குநரகம் சம்மன் அனுப்பியுள்ளது.

ஹேம்ந்த் சோரனின் உதவியாளரும், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவைச் சேர்ந்தவரும் பங்கஜ் மிஸ்ரா உடன் இணைந்து, மாநிலத்தில் சட்டவிரோதமாக சுரங்கம் தோண்ட அனுமதி வழங்கியது தொடர்பான குற்றச்சாட்டுகள் தொடர்பாக அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்படும் என்று பெயர் வெளியிட விரும்பாத அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த வழக்கு தொடர்பாக பங்கஜ் மிஸ்ரா கடந்த ஜூலை மாதம் கைது செய்யப்பட்டார்.

முன்னதாக, சுரங்க குத்தகை குற்றச்சாட்டு தொடர்பாக, ஹேமந்த் சோரனின் எம்எல்ஏ பதவியை தகுதி நீக்கம் செய்ய தேர்தல் ஆணையம், அம்மாநில ஆளுநர் ரமேஷ் பயாஸ்-க்கு கடந்த ஆகஸ்ட மாதம் பரிந்துரை செய்திருந்தது. இந்த நிலையில் தற்போது அமலாக்க இயக்குநரகம் சம்மன் அனுப்பி உள்ளது.

ஜார்கண்ட் மாநிலம், சாஹிப்கஞ்ச் மாவட்டத்தில், பங்கஸ் மிஸ்ரா உள்ளிட்டவர்கள் மீது பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கையின் படி, அமலாக்க இயக்குநரகம், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்த வழக்கினை விசராணைக்கு எடுத்துக் கொண்டது. மேலும், மாநிலத்தின் சட்டவிரோத சுரங்கம் தொடர்பாக பதியப்பட்டுள்ள மற்ற வழக்குகளையும் அமலாக்க இயக்குநரகம் தனது விசாரணைக்கு எடுத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் ஜார்கண்ட் மாநிலத்தின் எதிர்கட்சியான பாஜக, முதல்வர் சோரன் தனது லாப நோக்கத்திற்காக, சட்டவிரோதமாக சுரங்க உரிமையை பெறுவதற்காக தனது பதவியை தவறாக பயன்படுத்தியதால் அவர் பதவி விலக வேண்டும் என்று தெரிவித்திருந்தது. இந்த குற்றச்சாட்டை ஹேமந்த் சோரன் மறுத்திருந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்