அகமதாபாத்: குஜராத்தில் தொங்கு நடைபாலத்தில் நடந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
குஜராத் மாநிலம் அகமதாபாத் அருகே மோர்பி நகரில் மச்சு ஆற்றில் மீது அமைந்திருந்த தொங்கு பாலம் நேற்று முன்தினம் அறுந்து விழுந்ததில் 140-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
அங்கு தொடர்ந்து மீட்புப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் அந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் தெரியவந்துள்ளது. நாட்டின் மிக மோசமான பாலம் இடிந்து விழுந்த விபத்துகளில் இதுவும் ஒன்றாகக் கருதப்படுகிறது.
இதில் குஜராத்தைச் சேர்ந்த பிரதாப் சிங் ஜடேஜா குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
பிரதாப் சிங்கின் உறவினர் கனக் சிங் ஜடேஜா இதுகுறித்து கூறியதாவது:
விபத்து நடந்தபோது பாலத்தின் மீது எனது ஒன்றுவிட்ட அண்ணனான பிரதாப் சிங்கின் குடும்பத்தார் இருந்துள்ளனர். இதில் பிரதாப் சிங் ஜடேஜா, பிரதியுமான் சிங் ஜடேஜா ஆகியோரின் மனைவிகள், இந்த சகோதர்களின் தாயார், 4 குழந்தைகள் என மொத்தம் 7 பேர் நீரில் மூழ்கி இறந்துவிட்டனர்.
ஓட்டல் பணிகள் முடிந்து, பிரதாப் சிங் வீட்டுக்கு வந்தபோது வீடு பூட்டப்பட்டிருந்தது. குடும்பத்தினரின் செல்போன்களை தொடர்புகொள்ள முடியவில்லை. இதையடுத்தே குடும்பத்தினர் விபத்தில் சிக்கியது அவர்களுக்குத் தெரியவந்தது. இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago