ஜல்லிக்கட்டு விளையாட்டை கம்ப்யூட்டரில் விளையாடலாமே? - உச்ச நீதிமன்றம் கேள்வி

By எம்.சண்முகம்

ஜல்லிக்கட்டு விளையாட்டை கம்ப்யூட்டரில் விளையாடலாமே? என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு முரண்பட்ட நிலையை எடுப்பதாகவும் உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதி அளித்து கடந்த ஜனவரி 7-ம் தேதி மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் அனுமதி அளித்தது. இதை எதிர்த்து, இந்திய விலங்குகள் நல வாரியம், பீட்டா அமைப்பு மற்றும் ஐந்துக்கும் மேற்பட்ட தொண்டு நிறுவனங்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. அவர்களது கோரிக்கையை ஏற்று ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ரோஹின்டன் எப்.நாரிமன் அடங்கிய அமர்வு முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது.

மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்று வாதிட்டார். அப்போது நீதிபதிகள் ஒருபுறம் காளைகளை துன்புறுத்தக் கூடாது என்று உத்தரவு போடுகிறீர்கள். மறுபுறம் காளைகளை துன்புறுத்தும் போட்டிகளை அனுமதிக்க வேண்டும் என்று வாதிடுகிறீர்கள். மத்திய அரசு முரண்பட்ட நிலையை மேற்கொள்வது ஏற்புடையதல்ல என்று குறிப்பிட்டனர். தமிழக அரசு சார்பிலும், தடையை நீக்க கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவில், ஜல்லிக்கட்டு போட்டிகள் நீண்டகாலமாக தமிழகத்தில் நடந்து வரும் பாரம்பரிய விளையாட்டு. மக்களின் கலாசாரத்துடன் தொடர்புடையது. எனவே, அனுமதி அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

விசாரணையின்போது நீதி பதிகள், மனிதர்களின் மகிழ்ச் சிக்காக காளைகளை துன்புறுத்த அனுமதிக்க முடியாது. அது அரசியல் சாசனத்துக்கு எதிரானது. இந்த நவீன யுகத்தில் ஜல்லிக்கட்டு விளையாட்டை கம்ப்யூட்டரில் விளையாடலாமே? என்று கேள்வி எழுப்பினர்.

16-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

பீட்டா உள்ளிட்ட அமைப் புகள் சார்பில் ஆஜரான வழக்கறி ஞர்கள், ஜல்லிக்கட்டு போட்டியின்போது காளைகள் துன்புறுத்தப்படுவதற்கான ஏராள மான வீடியோ ஆதாரங்கள் உள்ளன. காளைகளை அடித்து துன்புறுத்துதல், மது அருந்தச் செய்தல், கண்களில் எலுமிச்சை சாற்றை பிழிந்து விடுதல், பிறப்புறுப்பில் மிளகாய் பொடியை தேய்த்து விடுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டு காளைகளுக்கு கோபத்தை வரவழைக்கின்றனர். இத்தகைய செயல்கள் மூலம் காளைகள் துன்புறுத்தப்படுவதால் இந்த விளையாட்டை அனுமதிக்க கூடாது என்று வாதிட்டனர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வழக்கின் அடுத்த விசாரணையை வரும் 16-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

20 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்