ஹைதராபாத்: டெல்லி சிறப்பு போலீஸ் நிறுவன சட்டத்தின் கீழ் சிபிஐ புலனாய்வு அமைப்பு உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த சட்டத்தின்படி ஒரு மாநிலத்தில் சிபிஐ விசாரணை நடத்த அந்த மாநில அரசு அனுமதி வழங்க வேண்டும். இதன்படி தெலங்கானா சார்ந்த பல்வேறு வழக்குகளில் சிபிஐ விசாரணை நடத்த அந்த மாநில தெலங்கானா ராஷ்டிர சமிதி அரசு அனுமதி அளித்திருந்தது.
இந்த சூழலில் தெலங்கானா மாநிலத்தில் ஆளும் கட்சி எம்எல்ஏக்களை இழுக்க பேரம் பேசிய விவகாரம் தொடர்பான வழக்கு மாநில உயர் நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது மாநில அரசு தரப்பு வழக்கறிஞர் கூறியதாவது:
தெலங்கானாவில் சிபிஐ விசாரணை நடத்துவதற்கான பொது அனுமதி வாபஸ் பெறப்பட்டுள்ளது. இதற்கான அரசாணை கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதி வெளியிடப்பட்டது. இதன்படி சிபிஐ விசாரணை நடத்துவதற்கு ஏற்கெனவே வழங்கப்பட்ட அனுமதிகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. இனிமேல் வழக்கின் தன்மையை பொறுத்து சிபிஐ விசாரணைக்கு அனுமதி அளிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
58 mins ago
இந்தியா
2 hours ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago