திருமலை பாத யாத்திரை பக்தர்களுக்காக ரூ.2.23 கோடி செலவில் திவ்ய தரிசன காம்ப்ளக்ஸ் திறப்பு

By என்.மகேஷ் குமார்

திருமலை திருப்பதிக்கு பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் இளைப்பாறுவதற்காக ரூ.2.23 கோடியில் கட்டப்பட்ட அனைத்து வசதிகளுடன் கூடிய காம்ப்ளக்ஸ் திருமலையில் நேற்று திறக்கப்பட்டது.

திருப்பதி ஏழுமலையானைத் தரிசிக்க நாடு முழுவதும் இருந்து தினசரி ஏராளமான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். குறிப்பாக தமிழகம், ஆந்திராவில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக திருமலைக்கு வருகின்றனர். அவர்கள் திருமலையில் தங்கி ஓய்வெடுக்க வசதியாக ரூ.2.23 கோடியில் ‘திவ்ய தரிசன காம்ப் ளக்ஸ்’ கட்டப்பட்டு நேற்று திறந்து வைக்கப்பட்டது. இதில் தங்கி இளைப்பாறும் பாதயாத்திரை பக்தர்களுக்கு உணவு, தேநீர், சிற்றுண்டி ஆகியவை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் உடைமைகளைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்வதற்கான வசதியும் செய்து தரப்பட்டுள்ளது. இதனால் பாதயாத்திரை பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பிரம்மோற்சவ ஏற்பாடுகள்

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா வரும் 26-ம் தேதி முதல் டிசம்பர் 3-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதையொட்டி வாகனங்கள் சீரமைக்கும் பணிகள், கோயில் மராமத்து பணிகள் ஆகியவை முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்