புதுடெல்லி: கேரள தங்க கடத்தல் தொடர்பாக சிபிஐ, அமலாக்கத் துறை ஆகியவை தனித்தனியே வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றன. இந்த வழக்கை கர்நாடகாவுக்கு மாற்றக் கோரி அமலாக்கத் துறை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதுகுறித்து உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை அளித்துள்ள பதில் மனுவில், “ஊழல் வெளிப்பட்டவுடன் அது தொடர்பாக விசாரணை கோரி பிரதமருக்கு கேரள முதல்வர் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டாலும் ஊழலில் முதல்வரின் முதன்மைச் செயலாளரின் பங்கு வெளிப்பட்டவுடன் மாநில அரசு விசாரணைக்கு எதிராக திரும்பியது. பொய் வழக்குகள் பதிவு செய்து, தங்க கடத்தல் வழக்கு விசாரணையை தடம் புரளச் செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளது.
குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் முதன்மைச் செயலாளர் இப்போதும் கேரள அரசின் உயர் பதவியில் உள்ளார். சாட்சிகளுக்கு நெருக்குதல் கொடுப்பது, மிரட்டுவது, செல்வாக்கை காட்டுவது என கேரள அரசின் முயற்சிகள் தொடர்கின்றன. விசாரணை கேரளாவில் தொடர்ந்தால், உயர் பதவி வகிக்கும் குற்றம் சாட்டப்பட்டவரால், வழக்கில் சுதந்திரமான மற்றும் நியாயமான விசாரணை தடம்புரள வாய்ப்புள்ளது” என்று கூறியுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago