சென்னை-மைசூரு வந்தே பாரத் ரயில் - வரும் 11-ம் தேதி மோடி தொடங்கி வைக்கிறார்

By செய்திப்பிரிவு

பெங்களூரு: சென்னை-மைசூரு இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி நவம்பர் 11-ம் தேதி தொடங்கி வைக்கிறார்.

இதுகுறித்து கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை பெங்களூருவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

பிரதமர் நரேந்திர மோடி நவம்பர் 11-ம் தேதி பெங்களூரு வருகிறார். அன்றைய தினம் கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 2-வது முனையத்தை அவர் திறந்து வைக்கிறார். அதே விழாவில் கெம்பே கவுடாவின் 108 அடி உயர வெண்கல சிலையை திறந்து வைக்கிறார். அன்றைய தினம் பிரதமர் மோடி சென்னை - மைசூரு இடையே வந்தே பாரத் விரைவு ரயில் சேவையை தொடங்கி வைக்கிறார். இது, இந்தியாவின் 5-வது மற்றும் தென்இந்தியாவின் முதல் வந்தே பாரத் விரைவு ரயில் சேவையாகும். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. இவ்வாறு பசவராஜ் பொம்மை தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்