உக்ரைனில் போர் தீவிரம் அடைவதால் இந்தியர்கள் வெளியேற வேண்டும் - இந்திய தூதரகம் அவசர உத்தரவு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: ‘‘உக்ரைனில் போர் தீவிரம் அடைந்து வருவதால், இந்தியர்கள் உடனடியாக வெளியேற வேண்டும்’’ என்று உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் அவசர அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

‘நேட்டோ’ மற்றும் ஐரோப்பிய யூனியனுடன் உக்ரைன் சேர விரும்பியது. அப்படி சேர்ந்தால், அது ரஷ்யாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்று அதிபர் புதின் எச்சரித்தார். அதை மீறி உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, நேட்டோவில் சேர பிடிவாதமாக இருந்தார். இதையடுத்து, உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாதம் ரஷ்யா தாக்குதலை தொடங்கியது. அதன்பின், பிரதமர் மோடி தலையிட்டு இருநாட்டு அதிபர்களுடனும் தொலைபேசியில் பேசினார்.

அதன்பின், உக்ரைனில் தங்கி படித்த இந்திய மாணவர்கள் ஆயிரக்கணக்கானோர் பத்திரமாக தாய்நாடு அழைத்து வரப்பட்டனர். இந்நிலையில், உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் நேற்று அவசர அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில் கூறியிருப்பதாவது:

ரஷ்யாவுக்கும் - உக்ரைனுக்கும் இடையில் நடக்கும் போர் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகிறது. எனவே, உக்ரைனில் தங்கியுள்ள இந்தியர்கள் அனை வரும் பத்திரமாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும். கடந்த 19-ம் தேதி இந்திய தூதரகம் ஏற்கெனவே இதேபோன்ற அறிவிப்பை வெளியிட்டது. அதை ஏற்று இந்தியர்கள் பலர் வெளியேறி உள்ளனர். எனினும் உக்ரைனில் இன்னும் தங்கியுள்ள இந்தியர்கள் எந்தெந்த வழிகளில் வாய்ப்புகள் உள்ளனவோ, அவற்றை பயன்படுத்திக் கொண்டு வெளியேற வேண்டும்.

உக்ரைனை விட்டு வெளியேறு வது தொடர்பாக உதவிகள் தேவைப்பட்டால், இந்திய தூதர கத்தை இந்தியர்கள் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. ஒரு வாரத்தில் இந்தியர்களுக்கு வெளியிட்ட 2-வது அறிவிப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE