குறைந்தபட்ச ஆதரவு விலை தொடர்பாக மத்திய அரசு மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: கோதுமை, கடுகு, பார்லி, பருப்பு போன்றவற்றின் குறைந்தபட்ச ஆதரவு விலையை (எம்எஸ்பி) உயர்த்துவதாக மத்திய அரசு கடந்த வாரம் அறிவித்தது. கோதுமையின் எம்எஸ்பி விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,015-ல் இருந்து ரூ.2,125 ஆக உயர்த்தப்பட்டது. இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ரன்தீப் சுர்ஜேவாலா நேற்று ட்விட்டரில் விடுத்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:

ரபி பயிர்களுக்கான எம்எஸ்பி விலையை உயர்த்துவதாக கூறி, விவசாயிகளை பாஜக ஏமாற்றியுள்ளது. எம்எஸ்பி விலையை அறிவித்த மத்திய அரசு, விவசாயிகளிடமிருந்து உற்பத்தி பொருட்களை எம்எஸ்பி விலையில் வாங்கவில்லை. எம்எஸ்பி சட்ட அங்கீகாரம் கிடைக்கும் வகையில் எம்எஸ்பி சட்டம் உடனடியாக மாற்றம் செய்யப்பட வேண்டும். காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூட்டணி அரசு எம்எஸ்பி-யை 205 சதவீதம் உயர்த்தியது. ஆனால் கடந்த 8 ஆண்டுகளில், மோடி அரசு வெறும் 40 சதவீதம்தான் உயர்த்தியுள்ளது. மோடி அரசு அறிவித்த எம்எஸ்பி நாட்டின் பணவீக்கத்தை விட குறைவு. விவசாயிகளால் நாம் சாப்பிடுகிறோம். அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்