இந்திய ஒற்றுமை யாத்திரை | சரத் பவார், உத்தவ் தாக்கரே பங்கேற்க காங். அழைப்பு

By செய்திப்பிரிவு

மும்பை: இந்திய ஒற்றுமை யாத்திரையில், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார், சிவசேனா கட்சியின் உத்தவ் தாக்ரே பங்கேற்க காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது.

காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை சுமார் 3,500 தூரம் யாத்திரை ஒன்றை நடத்தி வருகிறார். இந்திய ஒற்றுமை யாத்திரை என்று அழைக்கபடும் இந்த யாத்திரை செப்.7-ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கியது. பின்னர் கேரளா வழியாக கர்நாடகாவிற்குள் நுழைந்து ஆந்திரா வழியாக மகாராஷ்டிரா செல்கிறது. இந்திய ஒற்றுமை யாத்திரை நவ.7-ம் தேதி மகாராஷ்டிராவிற்குள் நுழைகிறது.

மகாராஷ்டிராவில் காங்கிரஸ் யாத்திரையை ஒருங்கிணைக்கும் குழுவில், அம்மாநில காங்கிரல் கட்சி பொறுப்பாளர் ஹெச்.கே.பாட்டீல், முன்னாள் முதல்வர் அசோக் சவான், கட்சியின் முன்னாள் தலைவர் பாலாசாகேப் தோரட், மும்பை காங்கிரஸின் தலைவர் பாய் ஜகதாப் மற்றும் கட்சி பிரமுகர்கள் விஸ்வஜித் கதாம் அமர் ராஜூர்கர், நசீம் கான் சந்தீப் தம்பே ஆகியோர் இடம்பெற்றிருக்கின்றனர்.

இந்த நிலையில், மகாராஷ்டிராவில் நடைபெற இருக்கும் இந்திய ஒற்றுமை யாத்திரையில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், சிவசேனா கட்சியைச் சேர்ந்த உத்தவ் தாக்கரே ஆகியோரை கலந்துகொள்ள கேட்டு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது. இதற்தாக காங்கிரஸ் பிரமுகர்கள், உத்தவ் தாக்கரேவை அவரது மடோஸ்ரீ இல்லத்திலும், சரத்பவாரை யஷ்வந்த்ரோ சவான் பிரதிஷ்தானிலும் சந்தித்து அழைப்பு விடுத்துள்ளனர்.

மகாராஷ்டிராவில் இதற்கு முன் ஆட்சியில் இருந்த மகாவிஹாஸ் கூட்டணியில் தேசியவாத காங்கிரஸும், உத்தவ் தலைமையிலான சிவசேனா அணியும் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

மேலும்