அடையாளம் காண முடியாத 12 மாவோயிஸ்ட் உடல்களை அடக்கம் செய்த போலீஸார்

By என்.மகேஷ் குமார்

ஆந்திரா ஒடிஷா எல்லையில் 30 மாவோயிஸ்ட்கள் கொல்லப்பட்ட சம்பவத்தில் அடையாளம் காணமுடியாத 12 பேரின் உடல்களை போலீஸாரே நேற்று அடக்கம் செய்தனர்.

ஆந்திர மாநிலத்தை ஒட்டி யுள்ள ஒடிஷாவின் மல்கங்கிரி மாவட்டம், ராம்கூர்கா வனப் பகுதியில் கடந்த அக்டோபர் 23-ம் தேதி நள்ளிரவு மாவோயிஸ்ட் களுக்கும் ஆயுதப்படை போலீ ஸாருக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச் சண்டை நடைபெற் றது. இதில் முதலில் 24 பேர், மறுநாள் 4 பேர், அதற்கு மறுநாள் 2 பேர் என மொத்தம் 30 மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொல் லப்பட்டனர். இந்தச் சண்டையில் ஆயுதப்படை வீரர் ஒருவரும் உயிரிழந்தார்.

உயிரிழந்த மாவோயிஸ்ட் களின் உடல்கள் மல்கங்கிரி அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டன. இதில் இதுவரை 16 மாவோயிஸ்ட் களின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

மற்ற 14 உடல்களில் 2 பேரின் சடலம் மட்டுமே அடையாளம் காணப்பட்டது. எஞ்சிய 12 பேரின் உடல்களை அடையாளம் காண முடியவில்லை. இந்நிலையில் இந்த 12 சடலங்களை நேற்று போலீஸாரே அடக்கம் செய்தனர்.

ஆயுதங்களை ஒப்படைத்து விட்டு சரணடையும் மாவோயிஸ்ட் களின் மறுவாழ்வுக்கு மத்திய, மாநில அரசுகள் பல திட்டங் களைச் செயல்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்