குழந்தை திருமணத்தால் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணை கட்டியணைத்து தேற்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானி

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: குழந்தை திருமணத்தால் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கட்டியணைத்து தேற்றினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிவேகமாக பரவி வருகிறது.

சர்வதேச பெண் குழந்தைகள் தினம் கடந்த 11-ம் தேதி கொண்டாடப்பட்டது. அன்றைய தினம் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை சார்பில் டெல்லியில் பிரம்மாண்ட மாநாடு நடைபெற்றது. இதில் நாடு முழுவதும் இருந்து பல்வேறு துறைகளில் சாதனை படைத்த சிறுமிகள், பெண்கள் பங்கேற்று சிறுவயதில் தாங்கள் எதிர்கொண்ட பிரச்சினைகளை எடுத்துரைத்தனர்.

அப்போது பிஹாரைச் சேர்ந்த குலாப்ஷா பர்வீன் கூறியதாவது:

நான் பிஹாரின் மசார்கி கிராமத்தை சேர்ந்தவள். எனக்கு 15 வயதானபோது 55 வயது நபருக்கு வலுக்கட்டாயமாக திருமணம் செய்து வைத்தனர். அந்த நபருக்கு ஏற்கெனவே திருமணமாகி 10 பிள்ளைகள் இருந்தனர். கணவரின் சகோதரிகள், குடும்பத்தினர் என்னை கொடுமைப்படுத்தினர். அங்கிருந்து தப்பி காப்பகத்தில் அடைக்கலம் புகுந்தேன். பள்ளிப் படிப்பை தொடர்ந்தேன். ஆனால் 18 வயதானபோது காப்பக நிர்வாகிகள் என்னை வீட்டுக்கு அனுப்பிவிட்டனர்.

வீட்டுக்கு வந்த பிறகு சொந்த குடும்பத்தினரே அவதூறாக பேசினர். அவமரியாதையாக நடத்தினர். கணவர் வீட்டுக்கு செல்ல வற்புறுத்தினர். வேறுவழியின்றி வீட்டில் இருந்து வெளியேறி ஐ.நா.அமைப்பின் யூனிசெப் நிர்வாகிகளை தொடர்பு கொண்டேன். அவர்கள் எனக்கு ஆதரவு அளித்து கணினி பயிற்சி, கணக்கியல் உள்ளிட்ட தொழிற்கல்வி பாடங்களை கற்பித்தனர். எனது பெயரைதாரா சாண்டில்யா என்று மாற்றிக்கொண்டேன். யூனிசெப் உதவியால் மிகப்பெரிய பேக்கரி நிறுவனத்தில் பணியாற்றினேன். தற்போது புதிதாக போக்குவரத்து நிறுவனத்தை தொடங்கி நடத்தி வருகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

இளம்பெண் பர்வீன் தனது கடந்த கால வாழ்க்கையை மேடையில் விவரித்தபோது உணர்ச்சிவசப்பட்டு அழுதார். பேச முடியாமல் அவரது நா தழுதழுத்தது. இதைப் பார்த்த மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, ஓடோடிச் சென்று அந்தப் பெண்ணை கட்டியணைத்து கொண்டார். அவருக்கு ஆறுதல் கூறி தேற்றினார். அவர் தொடர்ந்து பேச உற்சாகமூட்டினார். அவர் பேசி முடிக்கும்வரை அன்போடு அரவணைத்து கொண்டார். இளம்பெண் பர்வீனை அமைச்சர் ஸ்மிருதி இரானி கட்டியணைத்து தேற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

14 mins ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்