கர்நாடகாவில் முதல்முறையாக மதமாற்ற தடை சட்டத்தின் கீழ் இளைஞர் கைது

By செய்திப்பிரிவு

பெங்களூரு: உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த அஜய் குமார் (42) பெங்களூரு யஷ்வந்த்பூரை அடுத்துள்ள பி.கே.நகரில் வசித்து வருகிறார். இவர் கடந்த 5-ம் தேதி யஷ்வந்த்பூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், ‘‘கடைக்குச் சென்ற எனது மகளை சையத் மோகின் (24) கடத்திச் சென்று விட்டார்'' என குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து போலீஸார் சையத் மோகினை தேடி வந்தனர். கடந்த 13‍-ம் தேதி சையத் மோகின் காவல் நிலையத்துக்கு வந்து, எனக்கும் அஜய்குமாரின் மகளுக்கும் ஆந்திராவில் திருமணம் ஆகிவிட்டது என தெரிவித்தார். அப்போது அஜய்குமார் தனது மகளை, சையத் மோகின் மதமாற்றம் செய்துவிட்டதாக புகார் அளித்தார். இதன்பேரில் போலீஸார் சையத் மோகினிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர், கடந்த செப்டம்பர் 30-ம் தேதி கொண்டுவரப்பட்ட‌ மதமாற்ற தடை சட்டத்தின் விதிமுறைகளை மீறியது தெரியவந்தது. இதனால் மதமாற்ற தடை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்த போலீஸார், சையத் மோகினை கைது செய்தனர். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சட்டத்தின் கீழ் முதல் நபராக சையத் கைது செய்யப்பட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

22 mins ago

இந்தியா

53 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்