100 மருந்துகளின் விலை குறைப்பு: ஒழுங்குமுறை ஆணையம் நடவடிக்கை

சர்க்கரை நோய், எச்.ஐ.வி., மலேரியா உள்ளிட்ட நோய் களுக்கு பயன்படுத்தப்படும் 100-க்கு ம் மேற்பட்ட மருந்துகளின் விலையை குறைத்து தேசிய மருந்து விலை நிர்ணய ஆணை யம் உத்தரவிட்டுள்ளது.

இந்த நடவடிக்கை பல்வேறு மருந்து உற்பத்தி நிறுவனங்களின் லாபத்தை பாதிக்கும் என்று கூறப்படுகிறது.

தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையத்தின் இந்த உத்தரவு அதன் இணைய தளத்தில் வெள்ளிக்கிழமை வெளியானது.

விலை உச்சவரம்புக்கு உள்ளாகும் அத்தியாவசிய மருந் துகளின் பட்டியலை விரிவாக்கி மத்திய சுகாதார அமைச்சகம் நடவடிக்கை மேற்கொண்ட நிலையில், ஆணையத்தின் இந்த உத்தரவு வெளியாகியுள்ளது.

அரசால் விலை கட்டுப்படுத்தப்படும் மருந்து களின் பட்டியலை மத்திய அரசு கடந்த ஆண்டு விரிவாக்கியது. நாட்டில் விற்பனையாகும் மொத்த மருந்துகளில் சுமார் 30 சதவீத அளவை இந்தப் பட்டி யலின் கீழ் மத்திய அரசு கொண்டு வந்தது.

இந்நிலையில் தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையத்தின் தற்போதைய விலைக்குறைப்பு, ஜூலை 11 முதல் அமலுக்கு வந்துள் ளதாக ஆணையத்தின் அதிகாரி ஒருவர் கூறினார்.

சுமார் 70 சதவீத மக்கள் குறைந்த வருவாய் பிரிவினராக உள்ளனர். 120 கோடி பேரில் ஐந்தில் 4 பங்கு மக்களுக்கு மருத்துவக் காப்பீடு இல்லை. அரசின் மருந்து விலைக் கட்டுப்பாடு மூலம் இவர்களுக்கு நியாயமான விலையில் மருந்து கிடைக்க வழி ஏற்படுகிறது.

“எந்தவொரு மருந்தின் விலையையும் நிர்ணயிக்கும் உரிமை எங்களுக்குத் தரப்பட் டுள்ளது. அசாதாரண சூழ்நிலை யில் பொது நலனுக்கு இது அவசியம் என்று நாங்கள் கருதும் போது எங்கள் உரிமையை பயன்படுத்துகிறோம்” என்று தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் கூறியுள்ளது.

இதனிடையே இந்த விலைக் குறைப்பு நடவடிக்கை, சனோபி எஸ்.ஏ., அப்பாட், ரான்பாக்ஸி உள்ளிட்ட மருந்து உற்பத்தி நிறுவனங்களின் லாப அளவை பாதிக்கும் என்று கூறப்படுகிறது.

“தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையத்தின் தற்போதைய நடவடிக்கையால் ஏற்பட்டுள்ள தாக்கம் குறைவுதான். என்றாலும் எதிர்காலத்தில் கூடுதல் கட்டுப் பாடுகள் விதிக்கப்படும் அபாயம் உள்ளது” என்று நொமுரா மருந்து நிறுவன அதிகாரிகள் கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE