புதுடெல்லி: நாட்டில் தற்போது அதிநவீன வசதிகளுடன் கூடிய 4 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த வரிசையில் 5-வது வந்தே பாரத் ரயில் நவம்பர் 10 முதல், சென்னையில் இருந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையிலிருந்து புறப்படும் வந்தே பாரத் ரயில் கர்நாடக மாநிலம் பெங்களுரு வழியாக மைசூருவை சென்றடைகிறது. வந்தே பாரத் ரயில் சேவையை நவ.10-ம் தேதி பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைப்பார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த ரயில் தேவைக்கேற்ப வைஃபை உள்ளடக்க வசதியையும் கொண்டிருக்கும். ஒவ்வொரு பெட்டியிலும் 32 அங்குல திரைகள் உள்ளன. இந்த ரயிலின் முந்தைய பதிப்பில் இருந்த 24 அங்குல திரைகளுடன் ஒப்பிடும்போது பயணிகளுக்கு தகவல் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும். வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக இருக்கும்.
இதில் உள்ள குளிர்சாதன வசதி 15 சதவீதம் அதிக ஆற்றல் திறன் கொண்டதாக இருக்கும். இழுவை மோட்டாரின் தூசி இல்லாத சுத்தமான காற்றுடன், குளிர்ச்சியான, மிகவும் வசதியான பயணமாக இது இருக்கும்.முன்பு எக்சிகியூட்டிவ் வகுப்புபயணிகளுக்கு மட்டும் வழங்கப்பட்ட ஒரு பக்க சாய்வு இருக்கை வசதி இப்போது அனைத்து வகுப்புகளுக்கும் கிடைக்கும். எக்ஸிகியூட்டிவ் பெட்டிகளில் 180 டிகிரி சுழலும் இருக்கைகள் சேர்க்கப்பட்டுள்ளன.
» ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது ஐஎன்எஸ் அரிஹந்த் நீர்மூழ்கி கப்பல்
» நாட்டிலேயே முதன் முறையாக ரூ.1,082 கோடி செலவில் கிருஷ்ணா நதி மீது கேபிள் பாலம்
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago